Tuesday 10 May 2011

நட்சத்திர கொலை - 3

நட்சத்திர கொலை - 1
நட்சத்திர கொலை - 2


யார் அந்த கொலையாளி என்ற இணை ஆணையரின் கேள்விக்கு கபாலி நிதானமாய் "இப்போ தமிழ்நாட்டுலேயே உச்ச நட்சத்திரமாய் இருக்கிற தண்டர் ஸ்டார் உபேஷ் தான் ஐயா" என்ற இந்த பதிலால் அதிர்ச்சியடைந்த DC  "கபாலி என்ன சொல்லுரிங்க அவர் மத்தியிலும் மாநிலத்திலும் ரொம்ப செல்வாக்கான ஆள் அத மறந்துட்டிங்களா " என்ற இணை ஆணையரின் கேள்விக்கும் அதிர்ச்சிக்கும் அமைதியாய் கபாலி " ஐயா நான் கண்டு பிடிச்சதே உங்ககிட்ட சொன்னேன் இதுக்கு மேல என்ன செய்யணும்ன்னு நீங்க தான் சொல்லணும் " என்றார் . சற்றே அதிர்ச்சியிலிருந்து விலகியவராய் DC " சரி எப்படி அவர்தான் கொலையாளின்னு உறுதியாக சொல்லுரிங்க , நீங்க சொன்னவரை இதுவரை அவர் நம்ம விசாரணை வலயத்துக்குல்லையே வரலையே ? அவர் கொலையாளி என்பதற்கான ஆதாரங்கள் என்ன சொல்லுங்க " என்றார்.   

  " ஐயா நான் ஆதாரங்கள் இல்லாம உங்ககிட்ட சொல்லல , அதுவும் இல்லாம அவர் உங்களோடா நெருங்கிய நண்பர் , இவரை பத்தி உங்ககிட்ட சொன்னா விசாரணையில எதாவது தொய்வோ , தடையோ வரலாம் அதனால தான்  ஐயா இத பத்தி உங்ககிட்ட சொல்லல "என்ற கபாலியை  இடைமறித்து DC "கபாலி என்ன பத்தி உங்களுக்கு தெரியாதா கடமைன்னு வந்துட்டா நான் எதையும் பார்க்கறதில்ல , அதனாலதான் என்னோட ஜூனியர் எல்லாம் எனக்கு  மேல இருந்தும் நான் இன்னும் DCவே இருக்கேன் , சரி நீங்க உடனே  என் ஆபிசுக்கு நேராவாங்க என்றார் .

  இணை ஆணையரை பற்றி தெளிவாக தெரிந்திருந்தும் அவரை தர்ம சங்கடத்தை உண்டு பண்ணும்படியான காரியத்தை செய்து விட்டோமோ என்ற குற்ற உணர்வுடன் DC இன் அறைக்குள் விரைவாய் விறைப்பாய் நுழைந்தார், "வணக்கங்கயா" இது கபாலி , "வாங்க கபாலி உக்காருங்க இப்போ சொல்லுங்க என்ன ஆதாரம் இருக்கு உங்ககிட்ட " என்றார் DC. அதற்கு உடனே கபாலி " ஐயா நான் ஏதாவது உங்க மனம் வேதனையடையும் படி பேசியிருந்தா என்ன நீங்க மன்னிக்கணும் "என்றார் . "இல்லை கபாலி நீங்க ஒண்ணும் தப்பு பண்ணலே , இன்னும் சொல்லனும்னா உங்கள நினைச்சு நான் பெருமைதான்படுறேன், நாம இது போல இருப்பதில் தப்பில்ல " என்ற DCயை பெருமையாக பார்த்த படியே சொல்ல தொடங்கினார் கபாலி .

" ஐயா இது ரொம்ப சிம்பிள் கேஸ், கொலையாளி ரொம்ப பெரிய மனுஷராக இருப்பதாலும் , சினிமா காரரா  இருப்பதாலும் கொஞ்சம் சினிமா தனமா யோசிச்சு கொலை செஞ்சதால நமக்கு ரொம்ப ஈசியா போயிட்டது , நமக்கு கிடைச்ச முதல் க்ளு கொலை செய்யப்பட்ட யாழினி சொல்லிசென்றதுதான் , அது ...........இந்த உபேஷின் படத்தில் தான் அவர் முதன் முதலாக அறிமுகமானார்,அப்போதிலிருந்தே இவர்களின் நெருக்கம் தொடங்கிருக்கு , அந்த படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவின் ஷீல்டை தான் , அவர் நகர்ந்து போய் தொட்டு காட்டி நமக்கு முதல் க்ளுவை கொடுத்தார் , அந்த ஷீல்டிலும் உபேஷ் துப்பாகியுடன் தான் இருந்தார், இதிலிருந்தே அவர் மீது என் முதல் பார்வை விழுந்தது. இரண்டாவது, யாழினி வலது மார்பில் சுடப்பட்டு இறந்திருக்கிறார் அதுவும் மிக நெருக்கத்தில் இருந்து சுடப்பட்டு இருக்கிறார், ஒருவரின் வலது மார்பில் சுடப்பட்டு இருந்தால் கொலையாளி தன் இடது கையில் துப்பாக்கியை வைத்திருப்பதர்க்கான சாத்திய கூறுகள் மிக அதிகம் , அப்படியானால் கொலையாளி இடது கை பழக்கம் உடையவராக இருக்க வேண்டும், இந்த விஷயத்திற்கு ஆதாரம் தேவை இல்லை ஏனெனில்  உபேஷ் இடது கை பழக்கம் உடையவர் எனபது யாவரும் அறிந்ததே, அடுத்து கொலை நடக்கும் போது உபேஷுக்கும் யாழினிக்கும் இடையே நடந்த போராட்டத்தின் போது உபேஷின் இடது கை ஆட்காட்டி நுனி விரலின் பக்க எலும்புகள் உடைந்துள்ளது , இதற்காக அவர் தன் டாக்டர் .சபேசனிடம் சிகிச்சை எடுத்து கொண்டிருக்கிறார், அவர் டாக்டரிடம் போனது யாழினி கொலை நடந்து சரியாக முப்பது நிமிடங்கள் கழித்து, காரணம் கேட்ட டாக்டரிடம் அவர் சொன்ன பொய் ஷூட்டிங்கில் நடந்தது என்று , ஆனால் அவர் கடந்த ஒரு வாரமாக எந்த ஷூடிங்கிலும் கலந்து கொள்ளவில்லை. நிறைவாக யாழினியின் விரலிடுக்குகளில் எடுக்க பட்ட சதை துணுக்குகள் உபேஷின்னுடையதுதான் என்பது அவரின் முந்தய மெடிக்கல் ரிப்போட்டுகளுடன் ஒப்பிடுகையில் நிருபணமாகியுள்ளது. நிறைவாக யாழினியின் ஒப்பனை உதவியாளினி உஷாவின் வாக்குமூலம் நமக்கு மேலும் பலம் சேர்க்கிறது , இவர்களின் நெருக்கதிற்கு அவள் தான் ஒரே மௌன சாட்சி, உபேஷுடனான் நெருக்கத்தில் கர்ப்பமடைந்த யாழினி அதை கலைக்க மறுத்ததாலும் , யாழினியை திருமணம் செய்ய உபேஷ் மறுத்ததாலும் , இந்த குழந்தைக்கு உபேஷ் தான் தந்தை என எல்லோருக்கும் சொல்ல போவதாக யாழினி மிரட்டியதன் விளைவே இந்த கொலை. இப்போ சொல்லுங்க ஐயா நான் உபேஷை கைது பண்ணலாமா ? " என்றா கபாலி 

        "அசத்திட்டிங்க கபாலி, உங்களின் திறமைக்கு எனது வாழ்த்துக்கள் , ஒரு இடத்திலும் தொய்வு வராதபடி கேச நகர்த்தி இருக்கீங்க , யோசிக்கவே வேண்டாம் உடனே அந்த கொலை காரன் உபேஷை கைது பண்ணி ஆகவேண்டியதை பாருங்க " என்றார் DC. " ரொம்ப நன்றிங்கய்யா என்று சொல்லி கம்பீரமாய் நடந்து சென்ற கபாலியை பெருமையுடன் பார்த்தார் இணை ஆணையர் .

        ------------------------  நிறைவாய் நிறைந்தது ---------------------------

 அன்பிற்கினியவர்களே, தெரியாத்தனமாய் தொடங்கி விட்ட இந்த கதையை சொதப்பாமல் நிறைவு செய்து விட்டேன் என்றே நம்புகிறேன் , தவறிருந்தால் தயை கூர்ந்து பொறுத்தாளவும். உங்களின் தொடர் வாசிப்பிற்கு மனம் மகிழ்ந்த நன்றி . 
அன்பன் 
ARR.

பட உதவி: http://www.bing.com  
                      

10 comments:

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

முதல் முயற்சி என்ற அளவில் நிறைவாய் எழுதிவிட்டீர்கள் ராஜகோபாலன்-மிக எளிதான முடிச்சுக்களோடு.

A.R.ராஜகோபாலன் said...

மிக்க நன்றி சுந்தர்ஜி அண்ணா
உங்களின் தொடர் தனி கவனம்
என்னை கர்வம் கொள்ள செய்கிறது

வை.கோபாலகிருஷ்ணன் said...

ஆஹா, நல்லாவே கொண்டுபோய் முடிச்சுட்டீங்க! வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

நீங்கள் பதிவின் எண்ணிக்கை கூடுமோ என்கிற
எண்ணத்தில் நேரடியாக அனைத்தையும்
வார்த்தை மூலமாக சொல்வதாக முடித்துவிட்டீர்கள்
என நினைக்கிறேன்
இதையே தொடர்ந்து போய் துப்பு துலக்குவதாக
தொடர்ந்திருந்தால் இன்னும் சுவாரஸ்யம்
கூடி இருக்கும் என்பது என் எண்ணம்
அடுத்த கதையை ஆவலுடன் எதிர்பார்த்து...

A.R.ராஜகோபாலன் said...

@ வை.கோபாலகிருஷ்ணன்
மனம் மகிழ்ந்த நன்றிகள் ஐயா, உங்களின் தொடர் ஆதரவு என்னை பெருமைஅடைய செய்கின்றது

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
உங்களின் யூகம் மிகச்சரி ரமணி சார் , ஜவ்வாக இழுக்கும் என்று கருதி முடித்து விட்டேன் , தங்களின் இந்த ஆதரவுக்கு பணிவான நன்றிகள் சார்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு இடத்திலும் தொய்வு வராதபடி கதையை நகர்த்தி இருக்கீங்க , பாராட்டுக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்துக்கும்
முழு மன நன்றிகள் தோழி !

Radhan @ Venkatesh said...

துணிவான தொடக்கம்............

தெளிவான திரைக்கதை..........

மலரட்டும் மர்மங்கள்.........

குமியட்டும் வாழ்த்துக்கள்......

A.R.ராஜகோபாலன் said...

@venkatesh
தங்களின் முதல் வருகைக்கும்
உங்களின் முத்தான வாழ்த்திற்கும்
மனம் மகிழ்ந்த நன்றி ரதன்