இந்த பாத யாத்திரையை தொடங்கும் முன் இந்த பாதயாத்திரை குழுவினரைப்பற்றி சொல்கிறேன் ,இந்த சமாஜத்தின் பெயர் ராமானுஜ பக்த சபா, இதுவரை தொடர்ந்து 29 ஆண்டுகள் பாத யாத்திரை சென்று கொண்டு இருக்கிறார்கள் , இதன் முக்கிய அமைப்பாளர்கள்
- திரு .ராமசந்திரன்
- திரு .நாராயணன்
- திரு .சந்திரசேகர் (எ) ஐயப்பன்
முப்பது பேருடன் தொடங்கிய இந்த பாத யாத்திரை இப்போது சுமார் ஐநூறு யாத்திரிகர்களுடன் தொடர்கிறது.இந்த யாத்திரையின் போது அவர்கள் பாதயாத்திரை செல்லுபவர்களை பார்த்துகொள்ளும் முறை மிக அலாதியானது , ஒரு வேனில் இங்கும் அங்குமாக அமைப்பாளர்கள் நகர்ந்து கொண்டே இருப்பார்கள் , முதலில் வருபவரிலிருந்து கடைசி யாத்திரிகரை பார்க்கும் வரை அந்த நகருதல் இருக்கும் , அந்த வேனில் மோர், தண்ணீர், பழச்சாறுகள், பிஸ்கட்டுகள் இருந்து கொண்டே இருக்கும் , வேண்டியவர்கள் வேண்டியதை நிறுத்தி பெற்றுகொள்ளலாம், மூன்று வேளையும் அறுசுவை உணவு , மாலையில் டி அல்லது காபி இரவில் தங்குவதற்கான மண்டபங்கள் அனைத்தும் அற்புதமான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும், இவை அனைத்திற்கும் அவர்கள் வாங்கும் தொகை ரூ.400 மட்டுமே, பல கைங்கர்யங்கள் மூலமாக இது இவர்களுக்கு சாத்தியப்படுகிறது.இது மட்டும் இல்லாமல் பாதயாத்திரைக்கு தேவையான அத்தனை பொருட்களையும் (தோளில் மாட்டிக்கொள்ளும் படியான ஒரு துணிப்பை,வேங்கடவனின் உருவம் தாங்கிய படம் ,ஒரு மஞ்சள் வேஷ்டி,பெரிய ஏழடி உயரமான தடிமனான பாலித்தீன் கவர்,எங்கெங்கு தங்குகிறோம், உணவு வழங்கும் இடம் , நேரம் போன்றவை அச்சடிக்க பட்ட ஒரு விளக்க காகிதம் )பாதயாத்திரை துவங்குவதற்கு முதல் நாள் சகஸ்ரநாம பூஜை செய்து அதிலும் நம்மை பங்கேற்க வைத்து , பின் நம்மிடம் அளிப்பார்கள் அதை கையில் வாங்கிய உடனேயே நம்மில் ஒரு உன்னத உணர்வா இல்லை சக்தியா என்று தெரியாத வகையில் ஒன்று உள்செல்லும்.காலையில் பூஜையை தொடர்ந்து புறப்படும் யாத்திரை வேங்கடவனின் புகழ் பாடி செல்லும், பெரம்பூரை சுற்றி வந்து பின் அவரவர் தன் வழியே புறப்படுவர்.
காலையில் உணவு பொன்னியம்மன்மேட்டில் உள்ள லக்ஷ்மிநரசிம்மர் கோவிலில் ,மனதிற்கு நிறைவாய் நரசிம்மனை தரிசித்துவிட்டு வந்து அங்கேயே உணவை வாங்கி அருந்தி பின் யாத்திரை தொடங்கும்.
அங்கிருந்து தொடங்கும் யாத்திரை மதியம் பனிரெண்டு மணியளவில் காரனோடையில் முடியும் அங்கு தான் மதிய உணவு , அற்புதமான சாப்பாடு மனம் நிறையும் அளவுக்கு அன்பாய் பரிமாறுவார்கள், பின் அங்கேயே சிறிது நேரம் ஓய்வு ,பின் நடக்க தொடங்கினேன், இது என் முதல் முறை பயணம் என்பதால் கூட யாரும் இல்லை தனியாளாக போவது கொஞ்சம் கஷ்டமாகவே இருந்தது, கால் மெல்ல வலிக்க தொடங்கியது, காலையிலிருந்து 22 கிலோமீட்டர் நடந்திருக்கிறேன் எனக்கே ஆச்சர்யம் இன்னும் 18 கிலோமீட்டர் நடக்கவேண்டும், நடந்து கொண்டிருக்கிறேன் அப்போது என்னிடம் தண்ணீர் கேட்டபடியே இருவர் அறிமுகம் ஆனார்கள் ஒருவர் திரு. ரமேஷ் உதவி பேராசிரியர் கால்நடை மருத்துவ கல்லூரி, இன்னொருவர் திரு .பிரேம்குமார் துணை ஆணையர் கலால் வரி, மூன்று பேருக்கும் பண்பலை ஒத்துபோக ஒன்றாகவே நடக்க தொடங்கினோம் , இவர்களின் நட்பு எனக்கு சற்று உறுதியை தந்தது.
பழக்கமில்லாமல் நடப்பதால் காலில் வலி தாங்க முடியவில்லை , என்னுடன் வந்தவர்கள் முன்பே இதற்காக தினமும் இரண்டு கிலோமீட்டர் நடை பயிற்சியை மேற்கொண்டதால் அவர்களால் சமாளிக்க முடிந்தது, கோவிந்தனின் பெயரைசொல்லி தொண்டர்ந்தேன் பயணத்தை, ஒரு மணிநேரத்திற்கு நான்கு கிலோமீட்டர் தூரம் நடக்க வேண்டும் என்பது எங்களின் திட்டம், நான்கு கிலோமீட்டர் நடந்தவுடன் பத்து நிமிட ஓய்வு இதன் படி நடக்க தொடங்கினோம். இரண்டு கிலோமீட்டர் நடந்த உடனேயே கால் வலியால் ஓய்வுக்காக கெஞ்ச தொடங்கும் , அப்போது எங்களில் ஒருவரோ இல்லை எங்களை கடந்து செல்பவரோ சத்தமாக "கோபாலா .... கோவிந்தா....
வெங்கட்ரமணா ........ வைகுண்தாவாசா" என சொல்லி செல்லும் போது எங்கிருந்தோ வரும் வேகம் என்னை உந்தித்தள்ளும் இப்படியே இரவு ஏழு மணிக்கு பெரியபாளையம் அடைத்தோம், இங்குதான் இரவு தங்கல்.
இரவு உணவருந்திவிட்டு காலில் மஞ்சளும் தேங்காய் எண்ணையையும் கலந்து போட்டுகொள்ளும்மாறு அனுபவஸ்த்தர்கள் சொல்ல அதன் படியே போட்டுக்கொண்டேன் அப்போதுதான் என் கையில் பட்டது என் வலது உள்ளங்காலில் ஒரு ருபாய் நாணய அளவுக்கு ஒரு கட்டி, அது தெரியாமலேயே நடந்து வந்திருக்கிறேன். பக்கத்தில் திரும்பி பார்கிறேன் ஒருவர் இன்னொருவருக்கு கால் அமுக்கி கொண்டிருக்கிறார், இருவருமே அம்பது வயதை கடந்தவர்கள் , ஆனால் முன் பின் அறியாதவர்கள் இந்த யாத்திரையில் பெற்ற அறிமுகம் தான் ஆயினும் இந்த பாத சேவை, , இதில் இன்னொரு சுவாரஸ்யமான செய்தி காலை அமுக்கியவர் SAIL கம்பனியில் பொது மேலாளர், அமுக்கபட்டவர் அகரத்தில் நடைபாதையில் உணவகம் நடத்திவருபவர், என்னே அந்த ஆண்டவனின் விளையாட்டு, அவன் பெயரால் மக்கள் ஒருநிலையாவது என்ன ஒரு அற்புதம் அப்படியே பக்தியின் பலம் அறிந்து நெகிழ்து போனேன்.கண்களில் என்னை அறியாமலேயே கண்ணீர் , என் வலி மறந்து அவர் மறுத்தும் அவர் காலை நான் பிடித்து விட தொடங்கினேன் , இப்படி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சேவையாலேயே ஆண்டவனின் பக்தியை அனுபவித்த முதல் நாள் அது ..........................
35 comments:
நல்லதொரு ஆன்மீக பதிவு! உங்களுடனே கூட வந்த உணர்வு! நன்றி நன்பரே உங்கள் பதிவுக்கு!
@ஓ.வ.நாராயணன் ஓனர் ஆப் மாத்தியோசி
தங்களின் கவனத்திற்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சகோ
ஓரிரு திருத்தங்கள் செய்யணும்.
தங்கள் கவனத்திற்கு:
மூன்று /வேலையும்/ அறுசுவை உணவு = வேளையும்.
/தொழில்/ மாட்டிக்கொள்ளும் படியான ஒரு துணிப்பை,= தோளில்
//அமுக்கியவர் SAIL கம்பனியில் பொது மேலாளர், அமுக்கபட்டவர் அகரத்தில் நடைபாதையில் உணவகம் நடத்திவருபவர், என்னே அந்த ஆண்டவனின் விளையாட்டு, அவன் பெயரால் மக்கள் ஒருநிலையாவது என்ன ஒரு அற்புதம்//
ஆஹா, உண்மையில் ஆச்சர்யமான விஷயம் தான்.
நல்ல பதிவு. தொடருங்கள்.
@வை.கோபாலகிருஷ்ணன்
தங்களின் தனி கவனத்திற்கு மிக்க நன்றி ஐயா
தவறுகளை திருத்திவிட்டேன் , இனி இது தொடராது கவனமாய் இருக்கிறேன்
@ சுந்தர்ஜி
அண்ணா என்ன வார்த்தை இது
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்
நன்றி உங்களின் கருணைக்கு, கருத்துக்கு
" இப்படி ஒருவருக்கொருவர் செய்து கொள்ளும் சேவையாலேயே ஆண்டவனின் பக்தியை அனுபவித்த முதல் நாள் அது .......................... "
காருண்யத்திலும் அன்பிலும் என்றுமே இறையருளை உணர்ந்து விட முடியும். அதைதான் நீங்கள் அனுபவித்திருக்கிறீர்கள்!
@மனோ சாமிநாதன்
மிக உண்மை அம்மா
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
A.R.ராஜகோபாலன் said...
//தவறுகளை திருத்திவிட்டேன் , இனி இது தொடராது கவனமாய் இருக்கிறேன்//
நாம் எவ்வளவு கவனமாக இருந்தாலும் இதுபோல சிற்சில எழுத்துப்பிழைகள் நம் கண்ணுக்கு புலப்படாமல் போய்விடுவது மிகவும் சகஜம்.
எனக்கும் இதுபோல ஏற்படுவதுண்டு. ஏதோ என் கண்ணில் பட்டதை உங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அவ்வளவு தான்.
எழுத்துப்பிழைகள் இப்போது திருத்தப்பட்டு விட்டன. மிக்க நன்றி.
இதற்கெல்லாம் அதிக கவனம் எடுத்துக்கொள்ள, நீங்கள் அதிக சிரமப்படவேண்டாம். அவ்வபோது யாராவது சுட்டிக்காட்டினால் திருத்திக்கொண்டால் போதும்.
அன்புடன் vgk
வாழ்க்கை அனுபவம் தரும் எழுத்து ஜீவன் உள்ளது.இந்த யாத்திரைக்கான காரணமும், மனிதர்களை நேசிக்க முடிகிற தன்மையும் மனித உறவுகளின் அழகை வெளிப்படுத்துகிறது.நல்ல பதிவு.
@ வை.கோபாலகிருஷ்ணன்
மதிநிறை ஐயா
நீங்கள் என் மீதுள்ள பாசத்தினால் அப்படி சொல்லுகிறீர்கள், தவறு என்பது முதல் முறை செய்யும் போதுதான் இரண்டாவது முறை அது தப்பாக ஆகிவிடக்கூடும், இந்த கவனம் கூட இல்லாமல் பதிவிட்டது என் தவறு, இரண்டு முறை திரும்ப படித்தும் என் கண்ணில் படாமல் போய்விட்டது.
என் தவறுகளை சுட்டிக்காட்ட உங்களுக்கு எல்லா உரிமையும் உண்டு, இதற்காக நீங்கள் வருத்தப்படவேண்டாம், இதில் எனக்கு மிக்க மகிழ்ச்சியே, உங்கள் உளி பட்டால்தான் நான் முழு சிற்பமாவேன் மீண்டும் நன்றி.
@ மிருணா
மனம் மகிழ்ந்த நன்றி
உங்களின் கருத்து என் எழுத்தை
பண்படுத்தும்
:)
@ஷர்புதீன்
நன்றி ஷர்புதீன்
தாங்கள் நடை பயணம்குறித்து எழுதிவரும்
பதிவின் நடை மிகப் பிரமாதம்
நாங்களும் உடன் வருவதைப்போலவே
உணர்கிறோம்
நடையும் பதிவும் தொடர வாழ்த்துக்கள்
நல்லதொரு ஆன்மீக பதிவு....
காலையில் வேங்கடவனின் தரிசனம். போனசாக நரசிம்மரின் தரிசனம். இதைக் கொடுத்த உங்களுக்கு கோடி நமஸ்காரங்கள். அடியவருக்கு அடியவன் என்ற வகையில் உங்களையும் நமஸ்கரிக்கிறேன்
ஆன்மீகப் பதிவிற்கு மைனஸ் ஓட்டுப் போடுற மாகான் இங்கே யாரு?
கை மேற் பக்கம் உள்ளதைக் கிளிக்கினால் + ஓட்டு,
கை கீழ்ப் பக்கம் உள்ளதைக் கிளிக்கினால் - ஓட்டு!
இது கூடத் தெரியாமல் அண்ணாச்சியோடைப் பதிவைப் போய்ச் சீண்டுறாங்களே, என்ன சின்னப் புள்ளைத் தனமா இருக்கு,
சகோ மூனாவது நேர் ஓட்டு என்னுடையது;-)))
பாத யாத்திரை பற்றிய சுவையான அனுபவங்களைச் சுவாரஸ்யமாகப் பதிவிட்டிருக்கிறீர்கள் சகோ. கூட்டத் தோடு கூட்டமாக நடந்து போகும் போது களைப்பு, உடற் சோர்வெல்லாம் தெரியாயதென்பதை உங்கள் பதிவே சொல்லி நிற்கிறது.
அட! உங்க பதிவுகள் இதுவரை கண்ணில் படாமப் போயிருச்சே:(
(கொஞ்சம் ஊர் சுத்திக்கிட்டு இருந்ததில் விட்டுப்போச்சுன்னு நினைக்கிறேன்)
திருமலை நடைப்பயணம் அருமையா இருக்கு.
தொடருங்கள். தொடர்கிறேன்.
இனிய பாராட்டுகள்.
அட! உங்க பதிவுகள் இதுவரை கண்ணில் படாமப் போயிருச்சே:(
(கொஞ்சம் ஊர் சுத்திக்கிட்டு இருந்ததில் விட்டுப்போச்சுன்னு நினைக்கிறேன்)
திருமலை நடைப்பயணம் அருமையா இருக்கு.
தொடருங்கள். தொடர்கிறேன்.
இனிய பாராட்டுகள்.
நல்லதோர் ஆன்மீகப் பதிவு. திருமலை நடைப்பயணத்தினைப் பற்றிய உங்கள் பதிவின் நடையும் நன்றாகவே இருந்தது. மாதா வைஷ்ணதேவியின் கோவில் செல்லும் போதும் கட்ராவிலிருந்து கோவில் வரையான 12 கிமீ நடைபாதையில் இரண்டு முறை சென்ற அனுபவம் எனக்கும் இருக்கிறது. “ஜெய் மாதா தி” [Jai Mataa Di] அதாவது ”மாதாவுக்கு ஜே” கோஷங்கள் முழங்க செல்லும் போது வலியே தெரிவதில்லை. உங்கள் கூடவே நடைப்பயணம் வந்த அனுபவம் கிடைக்கிறது. தொடருங்கள்…
படிக்கப் படிக்க அருமையாய் உடன் பயணிக்கும் உணர்வு. வாழ்த்துக்கள்.
பட உதவி என்று எனது சுட்டி கொடுத்த தங்களின் உயர்ந்த உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.
அன்பு ராஜகோபாலன், உங்கள் பதிவைப் படித்தேன். பதிவில் இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் சிறுமி உங்கள் மகள் என்று நம்புகிறேன். தீர்க்காயுசுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும் இருக்க அந்த ஆண்டவனைப் பிரார்த்திக்கிறேன். எனக்குத் தெரிந்த ஒரு லேடி டெண்டிஸ்ட் ஆறு மாதங்களில் ஒரு பெண் குழந்தையை ஈன்றார். என் வீட்டில் வாடகைக்கு இருந்தவர். அந்தக் குழந்தை ஒரு ஹைப்பர் ஆக்டிவ் குழந்தை. பிறந்தபோது இன்குபேட்டரில் சுமார் ஒரு மாத காலம் இருந்ததாம்.அந்தக் குழந்தை இப்போது இரண்டாம் வகுப்பில் படிக்கிறாள்.வெகு சுட்டி. உங்கள் நம்பிக்கை பலித்து உங்கள் குழந்தை நலமாயிருப்பதை முதலிலேயே நீங்கள் தெரிவித்திருக்கலாம். கடவுளை நம்பினோர் கை விடப்படார் என்பது ஆன்றோர் வாக்கு. வாழ்க நலமுடன்.
@ Ramani
மனம் நிறைந்த நன்றி ரமணி சார்
@ரியாஸ் அஹமது
மிக்க மகிழ்ச்சி ரியாஸ்
@ நிரூபன்
அந்த மகன் நான்தான் சகோ அவசரத்துல போட்டுட்டேன்
உங்களின் கவனத்திற்கு மிக்க மகிழ்ச்சி சகோ
@ எல் கே
தன்யனானேன் எல் கே
@துளசி கோபால்
மனம் மகிழ்ந்த நன்றி மேடம்
தங்களின் முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
@வெங்கட் நாகராஜ்
மிக உண்மை நண்பரே
உங்களின் ஆதரவு என் எழுத்தை பலப்படுத்தும்
நன்றி
@இராஜராஜேஸ்வரி
உங்களுக்கு முனனால் நான் சாதாரணம்
ஆன்மீக பதிவின் ஆதாரமே நீங்கள் தானே
உங்களை தவிர்த்து என்ன பதியமுடியும்
நன்றி தங்களின் பெருந்தன்மையான கருத்திற்கு
@ G.M Balasubramaniam
ஆமாம் ஐயா என் மகள்தான், என் மகள் இப்போது என் அன்னையின் ஆசியாலும் ஆண்டவனின் அருளாலும் பூரண நலத்துடன் இருக்கிறாள், என் மகளும் இன்குபேட்டரில் 54 நாட்கள் இருந்தாள், நீங்கள் சொன்னது மிக சரி என் மகளின் நலனை முன்னமே தெரிவித்திருக்கவேண்டும், அதனால் தான் அவளின் சமீப படத்தை இணைத்திருந்தேன், உங்களின் கருத்திற்கும் கவனத்திற்கும் மிக்க நன்றி
//அமுக்கியவர் SAIL கம்பனியில் பொது மேலாளர், அமுக்கபட்டவர் அகரத்தில் நடைபாதையில் உணவகம் நடத்திவருபவர், என்னே அந்த ஆண்டவனின் விளையாட்டு, அவன் பெயரால் மக்கள் ஒருநிலையாவது என்ன ஒரு அற்புதம்//
ஆட்டுவித்தால் யாரொருவர்.. ஆடாதாரோ கண்ணா..
@Madhavan Srinivasagopalan
சத்திய வாக்கு மாதவன்
Post a Comment