Wednesday 4 May 2011

நட்சத்திர கொலை - 1

                   அந்த வெள்ளி கிழமை காலையில் அனைவரையும் அதிரவைத்த அலறவைத்த செய்தியை பலர் பலமுறை பலரிடம் பதறிய படி ஊர்ஜிதம் செய்துகொண்டனர். உண்மையா , உறுதியா , உளறலா, பிதற்றலா , பித்து பிடித்தது போல் பிய்த்து கொண்டனர்.இன்று எல்லா  மனதிலும் நல்லா பதிந்து போன உச்ச உயிர் நட்சத்திரம் யாழினி கொலை செய்யப்பட்டாள் என்ற செவி வழி செய்தி, செயலிழக்க செய்தது அவளின் ரசிகர்களை. குடும்ப பாங்கான வேடங்களில் வெளுத்துகட்டும் வென்னுடல் தேவதை . சமூக அக்கறை உள்ள, சக மனிதர்களின் சுக துக்கங்களை புரிந்து கொள்ளும் , அதை தன்னால் முடிந்தவரை தீர்க்க முயலும் அரிதாரம் பூசிக்கொள்ளாத சராசரி மனுஷியாக தன்னை காட்டிக்கொள்ளும் யாழினியை  கொலை செய்தவர் யார் ,ஏன்,எதற்கு , எதனால்,எப்படி ,இப்படி பல கேள்விகள் அனைவரது மனதிலும் அலை மோதியது. 

        அமைதியை கிழித்துக்கொண்டு கதறிய தொலைபேசி மணியில் விழித்துக்கொண்ட ஏட்டையா, எட்டி எடுத்த தொலைபேசி சொன்ன செய்தி அவரை பரபரக்க வைத்தது, உடனே நிலைய ஆய்வாளர் கபாலிக்கு சுறுசுறுப்பாய் சுழற்றினார் எண்ணை, வெண்ணையாய் சுற்றி சுழன்ற தொலைபேசி அவசரமாய் அலைபேசியில் அழைத்தது ஆய்வாளர் கபாலியை, அவர் அலோ சொல்லும் முன்னரே ஏட்டையா முனியாண்டி அவசரமாய் ஐயா......... நடிகை யாழினியை யாரோ கொலைபண்ணிட்டாங்களாம், இப்பதான்  கண்ட்ரோல் ரூம்லேந்து போன் வந்தது , DC நம்ம ஸ்டேஷனுக்கு வந்துகிட்டு இருக்காராம் , சீக்கரம் வாங்கையா .......... என மூச்சுவிடாமல் பேசி மூச்சிரைத்தார்  ஏட்டையா. உடனே பரபரப்பு பற்றிக்கொண்ட ஆய்வாளர் கபாலி, சரிங்க  ஏட்டையா உடனே வரேன் , எனக்கு முன்னாடியே DC ஐயா வந்துட்டார்ன்னா, இப்பதான் ரவுண்ட்ஸ் போயிட்டு வீட்டுக்கு கிளம்பினேன்னு சொல்லுங்க என தன்னிலை காக்க  ஏட்டையா உதவியை நாடினார் .

        அரக்க பறக்க ஸ்டேஷன் வந்து சேர்ந்த ஆய்வாளர் , வாசலில் நின்ற  ஏட்டையாவிடம் என்ன  ஏட்டையா,  ஐயா வந்துட்டாரா என வினவ ......... இல்லைங்க ஐயா , DC ஐயா உங்களைத்தான் அவர் ஸ்டேஷனுக்கு வரச்சொன்னாராம் என்ற பதிலில் உக்கிரமானார், ஏன்  ஏட்டையா இப்படி பண்றீங்க, ஒழுங்க கேட்டு சொல்லியிருக்கலாம் இல்ல , என் வீட்டுக்கு பக்கம் தானே DC ஆபிஸ் அப்படியே போயிருப்பேன்ல்ல என்று குரலுயர்த்த, மன்னிச்சுக்குங்க ஐயா சரியா காதுல விழல என்றார்  ஏட்டையா.எனக்கு மறுபடியும் போன் பண்ணிருக்கலாம்ல வெறுப்பாய்  கபாலி, இல்லைங்கையா போன் பண்ணுனேன் நீங்க எடுக்கல அதான் என இழுத்தவேலையில் , தன் செல்லை சோதித்த கபாலி மூணு மிஸ்ஸுடு கால் இருப்பதை பார்த்து , சரி வாங்க போவோம் என்று கூறிய ஆய்வாளரின் ஜீப் DC ஆபிஸ் நோக்கி புயலாய் புறப்பட்டது.

          விடிந்தும் விடியாத விடி காலையில் வித்தியாசமாய் தெரிந்த வெண்ணிற கட்டிடத்தில் வழுக்கி வந்து நின்றது கபாலியின் ஜீப் . இறங்கி ஓட்டமும் நடையுமாய் உள்ளே சென்ற ஆய்வாளரும்  ஏட்டையாவும் DC அறையின் அருகே நின்ற பாது காவலரிடம் தாங்கள் வந்த சேதி சொல்ல , ஐயா உங்களுக்காகதான் ரொம்ப நேரமாய் காத்திருக்காங்க என்ற பதிலினால்  ஏட்டையா வை பார்த்து கோபப்பார்வை வீசியபடியே கதவை விலக்கினார் கபாலி, உள்ளே இருந்த இணை ஆணையாளருக்கு விறைப்பாய் வைத்தனர் வணக்கம். வாங்க கபாலி விஷயம் தெரியுமா ?? அந்த நடிகையை எவனோ கொன்னுபோட்டுருக்கான், சீக்கரமா அந்த வீட்டுக்கு போய் தீர விசாரித்து அவன கண்டு  பிடிக்கணும், உங்களுக்கு ஒரு வாரம் டயம், உங்க திறமையை நம்பி இந்த கேச உங்ககிட்ட ஒப்படைக்கிறேன் ஆல் தி பெஸ்ட் ,என்றார் DCP
உங்க நம்பிக்கைய காப்பாத்துவேன் ஐயா என மீண்டும் சிலை போல் நின்று சல்யுட் செய்தார் .

 வேகமாய் வெளியே வந்த கபாலி டிரைவர் வண்டியை நடிகை யாழினி வீட்டுக்கு விடுங்க என்றபடியே ஏறி அமர்ந்தார். ஜீப்பில் பயணிக்கையில் அவரின் என்ன ஓட்டம் யாழினியை பற்றியே இருந்தது , எந்த புகாரிலும் , பிரச்சனையிலும் இதுவரை சிக்காத அவரை யார் கொன்றிருக்க முடியும், பெரும் புகழும் கொண்ட அவருக்கு யார் எதிரி , தொழில் ரீதியான போட்டியாக இருக்குமோ, கொலையாளி எதாவது தடயங்களை விட்டு சென்றிருப்பானா ? இல்லை அவன் புத்திசாலியாக இருந்து நம்மை இந்த கேசில் அலைக்கழிக்க போகிறானா தெரியலையே. இப்படி பல நினைப்புகளிலும் எதிர் பரப்புகளிலும் யாழினி வீட்டை அடைந்தார் .
------------------------------------------------------------------------------


எல்லோரும் எழுதுறாங்களேன்னு நானும் ஒரு கிரைம் கதைய ரைமிங் ஆ சொல்லனும்ன்னு தொடங்கிட்டேன் , முடிக்க தெரியாம முழிக்கறதால தொடரும்ன்னு முடிச்சிட்டேன் , மன்னிச்சுக்கோங்க சீக்கரமா முடிச்சிர்றேன்.

அன்பன் 
ARR     
         

                      

8 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

உயிரோட்டமுள்ள கொலையாக உள்ளது.

கனவோ அல்லது நடிகைபற்றிய கிசிகிசு செய்தி என்றோ முடித்து விடுவீர்கள் என எதிர்பார்த்தேன்.

தொடரும் என்று போட்டு இருப்பதால், யாழினி வீடு நோக்கிச்செல்லும் இவர்களை, கதையில் ஒரு திருப்பு முனையாக, அந்த யாழினியே கூட வரவேற்கலாம் என்று தோன்றுகிறது.

தொடரட்டும் க்ரைம் ....
வாழ்த்துக்கள்.

தொடரக்காத்திருக்கும் vgk

வெங்கட் நாகராஜ் said...

கொலை கொலையா முந்திரிக்கா! அட அடுத்து ஒரு கிரைம் தொடரா!. தொடரட்டும். வாழ்த்துகள்.

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மதிப்புக்குரிய ஐயா,
நீங்க எதிர்பாக்குற அளவுக்கெல்லாம் நான் தகுதியானவன் இல்லை , எல்லோரையும் போல
நானும் தொடர் கதை எழுதுறேன்.......
நானும் தொடர் கதை எழுதுறேன்.......
நானும் தொடர் கதை எழுதுறேன்.......

ஆயினும் உங்களின் ஊக்கத்திற்கு என் சிரம் தாழ்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
மிக்க நன்றி வெங்கட்
உங்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்வேன் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை , முயற்சிக்கிறேன் முடித்துவிட ............

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கொலை வாயிலில் நிற்கிறோம் ராஜகோபாலன்.

சீக்கிரம் திறக்கட்டும் மர்மக்கதவு.

டெம்ப்ளேட் இப்போ வாசிக்க இதமாய்.நன்றி.

RVS said...

ஆ! கொலை! .... கபாலி என்று திருடனுக்கு வைக்கும் பெயரை போலிசுக்கு வைத்து புதுமை செய்துவிட்டீர்கள். நன்று கோப்லி. ஒரு சின்ன கருத்து. கதை நடுவில் வசனம் வரும் போது Quotes க்குள் போட்டால் கொஞ்சம் சௌகரியமாக இருக்கும். நல்லா இருக்கு. ;-))

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
நன்றி சுந்தர்ஜி ....
ஏதோ தொடங்கிவிட்டேன் முழுமையாக முடியவேண்டும் , உங்களின் ஆதரவினால் . உண்மைதான் இப்போ ப்ளாக் லுக் நல்லா கிளியரா இருக்கு

A.R.ராஜகோபாலன் said...

@RVS
மகிழ் நன்றி வெங்கட்
நிச்சயமாக இந்த தவறு என் அடுத்த பதிவில் இருக்காது , சுட்டி காட்டியமைக்கு நன்றி