Sunday 10 July 2011

முத்துக்கள் மூன்று - தொடர் பதிவு



                                முத்தான கேள்விகளை  கேட்டு அதையே வேள்வியாய் தொடரும் இந்த தொடர் பதிவை என்னை தொடர உத்தரவிட்ட என் நண்பன் RVS  கட்டளைப்படி இதை தொடர்வதில் பெருமையும் பெருமிதமும் அடைகிறேன், நன்றி நண்பா
                                  இனி என்னுடைய உள்ளப்பூர்வமான , உணர்வுப்பூர்வமான, உணர்ச்சிப்பூர்வமான பதில்கள் .

       1) நீங்கள் விரும்பும் மூன்று விஷயங்கள்?
  • தென்றல் தாலாட்டும் ஹரித்ராநதி வடகரை படித்துறையும் , நண்பர்களும் நட்பும் ,
  • கல கலவென , கட கடவென கலக்கலாய் கழிந்த கல்லூரி நாட்கள் 
  • ராசிபுரம்  செந்தில் , ஏர்போர்ட் ஸ்ரீனி யுடனான கோடம்பாக்கம் ராஜாராம் காலனி பேச்சிலர் வாழ்க்கை 
      2) நீங்கள் விரும்பாத மூன்று விஷயங்கள்?  
  • தன் குறை தெரியாமல் , தேவை இல்லாமல் தன் புத்திசாலிதனத்தை நிரூபிக்க மற்றவர்கள் மீது கருத்தை திணிக்கும் அறிவுரைவாதிகள்
  • குடிகாரர்களும் , பக்கத்தில் குழந்தைகள் இருந்தாலும் கர்ப்பிணிகள் இருந்தாலும் எதைப் பற்றியுமே கவலைப் படாமல் பொது இடங்களில் புகை பிடிக்கும் மடையர்கள் 
  • குழந்தைகளைக் கொண்டு பிச்சை எடுக்கும் தாய்மை இல்லா பெண்கள்   
      3) பயப்படும் மூன்று விஷயங்கள்?
  • மருத்துவமனை (ரத்தத்தை பார்த்தாலே ஐயா காலி )
  • உடற்பயிற்சி (கொஞ்சம் இல்லை நிறையவே சோம்பேறி )
  • மனைவி (நெசமாத்தான் )
   4) உங்களுக்கு புரியாத மூன்று விஷயங்கள்?
  • நாம் வாழும் பிரபஞ்சம் 
  • பிறந்த குழந்தையின் அன்னிச்சையான சுவாசம்
  • பரிட்சையில கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க அதுல கொஸ்டீன் இருக்கு , ஆனா ஆன்சர் பேப்பர்ல ஆன்சர் இல்லையே ஏன் ?
    5) உங்கள் மேஜையில் உள்ள மூன்று பொருட்கள்?
  •  என் மகளின் வசீகரிக்கும் போட்டோ 
  • கிரடிட் கார்டு பில்கள் 
  • இலந்தவடை  
   6) உங்களை சிரிக்க வைக்கும் மூன்று விஷயம் or மனிதர்கள்?
  • என் சகோதரர்கள் (டயமிங்கில் பின்னி பெடலடுப்பவர்கள்)
  • ராசிபுரம் செந்திலின் குழந்தை தனம் (அவனே போன் பண்ணி மச்சி பிசியா இருக்கேன் அப்புறமா பேசுறேன் என்று போனை கட் பண்ணிடுவான், வீட்டிலிருந்து போன் வந்தாலும் சிகரட்   வாசனை அடிக்க கூடாது என்பதற்காக வாய் கொப்பளிப்பான், நான்காம் வருடம் படிக்கும் இவனை இரண்டாம் ஆண்டு மாணவன்  கூப்பிட்டு  கேள்வி கேட்டாலும் நின்று பதில் சொல்லுவான்  ) 
  • வடிவேலு 
  7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?
  • என்னுடைய டிரைனிங் அகடமிக்கு ப்ரோபைல் தயாரித்து கொண்டிருக்கிறேன் 
  • மனைவி தந்த சூடான சுவையான அடையை ரசித்து ருசித்து கொண்டிருக்கிறேன் 
  • என் டி சர்ட்டை நைட்டி போல போட்டு அங்கும் இங்கும் அலையும் என் மகளை பார்த்து பூரிக்கிறேன்  
  8) வாழ் நாள் முடிவதர்குள் செய்ய நினைக்கும் மூன்று காரியங்கள்?
  • ஹரித்ராநதி வடகரையில் உள்ளடங்கிநாற் போல் ஒரு வீடு 
  • ஆதரவற்ற முதியோர்களுக்காக ஒரு இல்லம் 
  • கோபப் படாத கணவனாக 
 9) உங்களால் செய்து முடிக்கக் கூடிய மூன்று விஷயங்கள்?
  • இல்லையென வந்தவர்களுக்கு இருப்பதை கொடுக்க முடியும் 
  • என்மேல் தவறன தெரிந்தால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியும்
  •   கோபமாய் இருக்கும் என் மகளை சிரிக்க வைக்கமுடியும் 
10) கேட்க விரும்பாத மூன்று விஷயங்கள்?
  • காகித கதாநாயகர்களின் பன்ச் டயலாக் 
  • அரசியல் வாதிகளின் வெத்து வாக்குறுதிகள்
  • குழந்தையின் அழுகை 
11) கற்றுக் கொள்ள விரும்பும் மூன்று விஷயங்கள்?
  • பொறுமை
  • சிக்கனம்
  • பிற பல மொழிகள் 
12) பிடிச்ச மூன்று உணவு வகை?
  • சின்ன வெங்காயம் நிறைய போட்டு நல்லண்ணை ஊற்றிய புளிக்குழம்பு 
  • புளியோதரையும் சோறு வெகு பொருத்தமாய் சாம்பாரு 
  • தேங்காய் சாதம் (துருவிய தேங்காயும்,நெய்யில் வறுத்த முந்திரியும் ஆஹா )
13) அடிக்கடி முணுமுணுக்கும் மூன்று பாடல்கள்?
  • நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும் - திரைப்படம் இரும்பு திரை 
  • உன்னை நானறிவேன் என்னை யன்றி யாரறிவார் - திரைப்படம் குணா 
  • வா வா என் தேவதையே - திரைப்படம் அபியும் நானும் 
14) பிடித்த மூன்று படங்கள்?
  • கர்ணன்
  • ஹேராம்
  • மொழி 
15) இது இல்லாம வாழ முடியாதுனு சொல்லும்படியான மூணு விஷயம்?
  • பணம்
  • நொறுக்குத் தீனி 
  • அதிகாலை தூக்கம் 
16) இதை எழுத அழைக்கப்போகும் மூன்று நபர்?


40 comments:

தமிழ் உதயம் said...

உங்கள் மனதிலுள்ள பல விஷயங்களை, கேள்வி பதில் வடிவத்தில் தந்துள்ளீர்கள்.

சென்னை பித்தன் said...

16x3=48;4+8=12;1+2=3!!
வெங்காயம் போட்ட அடையா? தொட்டுக் கொள்ள என்ன?!

Unknown said...

நிறைய விசயங்கள் ஒத்து போகிறது நமக்குள் என்னை அழைத்து என் பதில்கள் உங்களை காபி அடித்த மாதிரி இருக்குமே நண்பா ...நல்லதை பலமுறை சொல்லுவோம் தப்பில்லை ...நன்றி நன்றி நன்றி ...

Unknown said...

சரி எங்க நான் ஒரு அர்த்தத்தில பேரு வச்சு ஓட்டிகிட்டு இருக்கேன் ..நீங்க என்னை இப்படி பில்ட் அப் செய்து மாட்டி விட்டுடீங்கலே ...காதை நீட்டுங்க நான் டம்மி பீசு வெளில தெரியாம நமக்குளே இந்த மேட்டர் இருக்கட்டும் ஹி ஹி

Unknown said...

வாக்களித்தேன் என்று சொன்னால்தான் நம்புவீங்களா !!!!!!!!!

வெங்கட் நாகராஜ் said...

கேள்விகளுக்கு உங்கள் சுவையான பதில்கள்... மன்னை மைனர் அழைத்தவர்களில் நீங்கள் எழுதியாயிற்று... நான் இன்னும் எழுதணும்.....

சுதா SJ said...

பாஸ்
இந்த தொடர் உங்களை அறிந்து கொள்ள ரெம்ப உதவியது

சுதா SJ said...

உங்கள் பதில்கள் ரெம்ப எதார்த்தமானது ரசிக்கத்தக்கது

ஷர்புதீன் said...

//வா வா என் தேவதையே - திரைப்படம் அபியும் நானும் //

எனக்கு "பேய்களா பூதமா" - படம் மகாநதி ( இன்று இந்த பாடலை கேட்டல் மனம் சற்று இறுகிவிடும்)

Unknown said...

முத்துகள் மூன்றும் அருமை

சகோ நன்றி

புலவர் சா இராமாநுசம்

RAMA RAVI (RAMVI) said...

ரத்தின சுருக்கமாக அழகான பதில்கள்.

Madhavan Srinivasagopalan said...

// பரிட்சையில கொஸ்டின் பேப்பர் கொடுக்குறாங்க அதுல கொஸ்டீன் இருக்கு , ஆனா ஆன்சர் பேப்பர்ல ஆன்சர் இல்லையே ஏன் ? //

உங்கள A4 பேப்பர் வாங்கி வரச் சொன்னா அதான் எங்கயுமே கெடைக்கலேன்னு வந்து சொன்னீங்களா ?

//நான்காம் வருடம் படிக்கும் இவனை இரண்டாம் ஆண்டு மாணவன் கூப்பிட்டு கேள்வி கேட்டாலும்....//

படிச்சத மறக்காத புள்ளை..
அதன் கேட்டதுக்கு சொல்லுது போல..

// 7) தாங்கள் தற்போது செய்து கொண்டு இருக்கும் மூன்று காரியங்கள்?//

அப்ப இந்தப் பதிவ வேற யாரோ எழுதிக் கொடுத்தாங்களா ?

---------------
PS: என்னைத் தொடர அழைக்காததால்.. இந்தப் பதிவை
நான் புறக்கணிக்கிறேன்..
(ம்ம்ம்ம்.. என்ன செய்ய.. பிலாகுல எழுத சரக்கு கெடைக்க மாட்டேங்குதே )

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
உங்களின் கனிவிற்கும் கருத்திற்கும் நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
உங்களின் கனிவிற்கும் கருத்திற்கும் நன்றி ஐயா
அவியலும் இல்லை சர்க்கரையும் இல்லை , வெறுமனே தான் ஐயா
எல்லாம் மனைவியின் கொடுமை

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
உடன்பிறப்புகளுக்குள் ஒத்துப் போவதில் என்ன ஆச்சர்யம் நண்பா
நன்றி உங்களின் கருத்திற்கு வாக்கிற்கு

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
சீக்கிரம் எழுதுங்க நண்பரே , படிக்க ஆவலாய் இருக்கிறேன்
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
பாஸ் நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
காலம் எல்லாவற்றையும் மாற்றும் நண்பரே
கவலையை அருகே விடாதீர்கள்

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
மனம் நிறைந்த நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI
உங்களின் கனிவிற்கும் கருத்திற்கும் நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan

தப்புத்தான் தப்புத்தான் .....................
பெரியவர் என்னை மன்னிக்கணும்
நன்றி உங்களின் கருத்திற்கு

ஸ்ரீராம். said...

சுவையான பகிர்வு.

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
உங்களின் கனிவிற்கும் கருத்திற்கும் நன்றி

ரிஷபன் said...

அமர்க்களப்படுத்திட்டீங்க..
ஹரித்ராநதில சீக்கிரமா வீட்டைக் கட்டுங்க.. அந்தப் பக்கம் போனா வந்தா தங்கிட்டு போறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@ரிஷபன்
இப்பவே நீங்க வந்தாலும் தங்கி செல்லலாம் சார் கடல் மாதிரி மனசும் அதோட சின்னதா வீடும் இருக்கே, நன்றி உங்களின் கருத்துக்கு

நிரூபன் said...

முத்தான மூன்று விடயங்கள் பற்றி கலக்கலாகப் பதிவிட்டிருக்கிறீங்க.

ரசித்தேன் பாஸ்.

பயங்கர கோவக்கார ஆளா இருப்பீங்க போல இருக்கே;-))

ஹி....ஹி...

நிரூபன் said...

தொடர்பதிவிற்கு அன்போடு அழைத்தமைக்கு நன்றி சகோ.

நேரம் கிடைக்கும் போது, வெகு விரைவில் பதிவிடுகிறேன்.

ADHI VENKAT said...

அருமையான பதில்கள். ஒவ்வொன்றும் ரசிக்கும் படியாக இருந்தது.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
சகோ மிக்க நன்றி
கோவம் என்பதற்கு அர்த்தம் தெரியாதவன் சகோ நான்

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நன்றி சகோ அழைப்பை ஏற்றதற்கு

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
மனம் நிறைந்த நன்றி சகோதரி

G.M Balasubramaniam said...

பதிவைப் படித்த பிறகு ஹரித்ரா நதி பற்றி அறிய ஆவல். உங்களை நீங்களே அறிய உதவியிருக்கும் ஒரு பதிவு என்று எண்ணுகிறேன்.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
என்னுடைய மன்னையின் பெருமை பதிவில் எழுதிருக்கேன் அய்யா,
காலம் அனுமதித்தால் படியுங்கள்
நன்றி உங்களின் கருத்துக்கு

RVS said...

நண்பா! கலக்கிட்டே!! தென்றல் தாலாட்டும் வடகரை... வார்த்தையே சொக்க வைக்குது... நன்றி. ;-)

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நண்பா நீ தொடங்கியது , நான் தொடர்கிறேன்
மலை நீ மடு நான்
நன்றி ஒரு தாயாய் என் மழலையை ரசித்தமைக்கு

சாகம்பரி said...

எனக்கும்தான்-
இலந்தவடை - எப்படி வாங்குகிறீர்கள் ?
ஆதரவற்ற முதியோர்களுக்காக ஒரு இல்லம் - இதோ கூடிய சீக்கிரம் ஆரம்பித்துவிடுவேன்.
என்மேல் தவறன தெரிந்தால் யாரிடமும் மன்னிப்பு கேட்க முடியும் - காலில் விழுந்தாவது செய்வேன்.
சின்ன வெங்காயம் நிறைய போட்டு நல்லண்ணை ஊற்றிய புளிக்குழம்பு - same pinch
குழந்தையின் அழுகை - அழுகையை நிறுத்தும் கருவியாக நிறைய லாலிபாப் எப்போதும் என்னிடம் இருக்கும்.

A.R.ராஜகோபாலன் said...

//இலந்தவடை - எப்படி வாங்குகிறீர்கள் ? //
மூன்று வழிகளில்
அ . சென்னை சாலிக்ராமத்தில் ஒரு கடையில் உள்ளது
ஆ. பாண்டிச்சேரி சங்கமம் கடையில்
இ . கரூரிலும் நிறைய கிடைக்கும் என் நண்பன் அங்கிருந்து அனுப்புவான் .

துணை செய்தி : இலந்த வடை சத்தியமங்கலத்தில் தான் பேமஸ் அங்கு தயாரிக்க படும் இலந்த வடைகள் சுவையாக காரமில்லாமல் இருக்கும்.
நன்றி உங்களின் கருத்துக்கு

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் பகிந்ததற்கு பாராட்டுக்கள்..

நிலாமகள் said...

என் டி சர்ட்டை நைட்டி போல போட்டு அங்கும் இங்கும் அலையும் என் மகளை பார்த்து பூரிக்கிறேன் //
எல்லாக் குழ‌ந்தைக‌ளும் ஒருகால‌க‌ட்ட‌த்தில் இதை செய்ப‌வ‌ர்க‌ளாய் இருக்கிறார்க‌ள்! உங்க‌ள் வ‌ரிக‌ள் எம் குழ‌ந்தைக‌ளின் அப்ப‌ருவ‌த்துக்கு பின்னோக்கி ம‌ன‌சை இழுத்துச் சென்று புன்ன‌கைக்க‌ வைத்து விட்ட‌து.

மூன்று ப‌ற்றிய‌ தொட‌ர் ப‌திவில் மெருகேறிய‌ப‌டியே உள்ள‌து. தேர்வு செய்யும் ப‌ட‌ங்க‌ள் கூட‌ க‌வ‌ர்கின்ற‌ன‌. வாழ்த்துக‌ள்! மென்ம‌ன‌மும் குண‌விசேட‌ங்க‌ளும் அறிய‌ அறிய‌ நிறைவாய் உண‌ர்கிற‌து ந‌ட்பு ம‌ன‌ம்.

vetha (kovaikkavi) said...

நல்ல சுவையான பதில்கள். எனக்கும் மொழி படம் மிகவும் பிடிக்கும்.
Vetha.Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com