Wednesday, 6 July 2011

எங்க ஊரு நல்ல ஊரு- மன்னை மண்ணின் பெருமை

                  மதி நிறைந்த அன்பில் சிறந்த சகோதரி அன்புடன் மலிக்கா அவர்கள் என் எழுத்தின் மேல் நம்பிக்கையை வைத்து என்னை தொடர சொன்ன பதிவு இது ,அவர்களின் அன்பு கட்டளையை ஏற்று நான் பிறந்த , வளர்ந்த , நேசிக்கும், பூஜிக்கும் என் மண்ணின் பெருமையை எழுத தொடங்குகிறேன் , இதில் ஏதேனும் குறை இருப்பின் மன்னையை அறிந்தவர்களும், மன்னையின் செல்வர்களும் மன்னிப்பார்களாக ....................

  

 மன்னார்குடி குளம் பாதி கோவில் பாதி , நீர் பாதி நிலம் மீதி என்ற சொல்லுக்கு ஏற்ப கோவிலும் குளமுமாக எங்கெங்கும் பசுமையாக இருக்கும் ஊர்.  , மன்னார்குடியில் புகழ்மிக்க கோவில்கள் பல உள்ளன. அவற்றுள் மன்னார்குடி ராஜகோபாலசாமி திருக்கோவில் உலகச் சிறப்பு வாய்ந்தது.இக்கோவில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது.மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம் என இந்து புராணங்கள் கூறுகின்றன..மன்னார்குடி மதிலழகு என்பதற்கு  ஏற்ப எங்கள் கோவிலின் மதிலழகை பார்த்துக்கொண்டே இருக்கலாம்


    
  அடுத்த பெரிய ஆச்சர்யம் எங்க ஹரித்திராநதி, மிகப்பெரிய குளம் பார்க்குமிடமெல்லாம் தண்ணீராகத் தெரியும், இதை விட திருவாரூர் குளம் பெரியதென்று சொல்லுபவர்களும் உண்டு ஆனால் அது உண்மையல்ல, திருவாருர்  குளம் ஐந்து வேலி, எங்களின் குளம் ஏழு வேலி .கிருஷ்ணனின் தரிசனம் வேண்டிய முனிவர்கள் தவமிருந்த குளம் இது. இதனை யமுனை நதியாகவே கருதுவதால், "ஹரித்ரா நதி' என்றே அழைக்கிறார்கள். குளமாக இருந்தாலும் நதியின் பெயரில் அழைக்கப்படும் தீர்த்தம் இது. ஆனி பவுர்ணமியில் இந்த தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா நடக்கிறது.  எங்கள் ஊரில் 108 குளங்கள் உள்ளன, கோவில்கள்  சொல்லவே வேண்டாம் , மன்னர்கள் குடியிருந்ததால் இதற்கு மன்னார்குடி என்று பெயர் வந்ததாகவும் சொல்லுவதுண்டு ,  அந்த காலத்திலேயே முறையாக கட்டமைக்கப் பட்ட அகலமான வீதிகள் மனதை கவரும் வகையில் இருக்கும். 

  அடுத்து எங்கள் ஊர் தீட்ஷதர்களின் கைவண்ணத்தில் அந்த கோபாலன் அழகு, மன்னார்குடி அலங்காரத்திற்கு மிகவும் விசேஷமானது அதிலும் வெண்ணைதாழியன்று கோபாலனின் பின் அலங்காரம் பார்க்க கண் கோடி வேண்டும் 


                          மன்னார்குடி நகராட்சி நூற்றாண்டை கடந்த நகராட்சி,இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 61,588 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மன்னார்குடி மக்கள் தொகையில் 9% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

   மன்னையில் எல்லாமத வழிபாட்டு தளங்களும் உள்ளன , இது வரையில் எங்கள் ஊரில் ஒரு சிறு பிரச்சனை கூட , மத ரீதியாகவோ அல்லது சாதியரீதியாகவோ வந்தது இல்லை , வரவும் வராது, அன்பான மக்கள் , அனுசரணையான பழக்க வழக்கம் கொண்டவர்கள்.உலகம் வளர்ந்து  வருவதற்கு ஏற்ப  மன்னார்குடியும் தன்னை நாளுக்கு நாள் புதுப்பித்து கொண்டே வருகிறது . 1991க்கு முன்னாடி எப்படியோ தெரியாது ஆனால் அதற்கு  பிறகு மன்னார்குடியை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது, அரசியல் முறையிலே பலமான பெயரைப் பெற்றது எங்களின் ஊர்.

 மன்னார்குடியில் மாணவர்களுக்கு தேசிய மேல்நிலைப் பள்ளி மற்றும் பின்லே மேல்நிலைப் பள்ளியும் , மாணவிகளுக்கு தூய வளனார் பெண்கள் மேல் நிலைப் பள்ளியும் உள்ளது , இதைத் தவிர பல நடுநிலை பள்ளிகளும், உயர்நிலைப் பள்ளிகளும் , தனியார் பள்ளிகளும் உள்ளன.

இன்னொரு சந்தோஷமான செய்தி கூடிய விரைவில் மன்னார்குடி மக்களின் கனவாக இருந்த ரயில் வரப்போவதுதான் , இதுவரை மன்னார்குடியிலிருந்து எங்கு சென்றாலும் பஸ் தான் இனி அது ரயிலாகவும்  இருக்க போவதில் மிகுந்த மகிழ்ச்சி எனக்கு.

        


இதுவரை நான் அறிந்ததை , தெரிந்ததை எனக்கு தெரிந்த மொழியில் நடையில் எழுதி உள்ளேன் , இதில் ஏதேனும் குறை இருந்தால், அறிந்தவர்கள்  என்னை திருத்தினால் மிக்க சந்தோஷமடைவேன். 

அன்பன்
ARR

தகவலுதவி: விக்கிபீடியா 

60 comments:

அன்புடன் மலிக்கா said...

ரொம்ப சந்தோஷமாக இருக்கு அண்ணா. என் சொல்லுக்கிணங்கி அழகிய சொல்வளத்தோடு மன்னையென்ற மன்னார்குடியின் அருமை பெருமைகளை அழகுற விளக்கியவிதம் அருமையோ அருமை..

//இன்னொரு சந்தோஷமான செய்தி கூடிய விரைவில் மன்னார்குடி மக்களின் கனவாக இருந்த ரயில் வரப்போவதுதான்// ஆகா சந்தோஷமான செய்திதான்..

எங்க ஊரிலிருந்த ரயில் போக்குவரத்துதான் [சென்னைக்கு ]நின்றுவிட்டதாம்.

என் நெஞ்சார்ந்த நன்றிகள் அண்ணா.
மீண்டும் வருகிறேன் அண்ணா இப்போது அவசரமாக வெளியில் செல்கிறேன்..

Madhavan Srinivasagopalan said...

மன்னர்குடியிலேருந்து சென்னை வழியா ஆந்திராவிற்கு ரயில் விடுவாங்களா.. (ஒரு டவுட்டு) ?

கௌதமன் said...

மன்னை பற்றி பல புதிய செய்திகள். சுவையான கட்டுரை.

Yaathoramani.blogspot.com said...

மன்னை குறித்து தங்கள் பதிவு அருமை
படங்கள் மிக மிகச் சிறப்பாக இருக்கிறது
நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்

RAMA RAVI (RAMVI) said...

மிகவும் அழகாக மன்னார்குடியை பற்றி விவரித்து இருக்கிரீர்கள்.படங்கள் அழகாக உள்ளது.

RVS said...

சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா? ;-)))

A.R.ராஜகோபாலன் said...

@அன்புடன் மலிக்கா
அன்பு சகோதரியின் அன்புக்கு, கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
உட்டா உங்களப் பாக்க வந்துடுறேன் மாதவன்

A.R.ராஜகோபாலன் said...

@kggouthaman
நண்பர் ஸ்ரீராமின் சகாவின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@Ramani
மனம் மகிழ்ந்த நிறைந்த நன்றி ரமணி சார்

Mathuran said...

உங்கள் ஊர் பற்றி நிறைய அறிந்துகொண்டேன் .... நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@RAMVI
மனம் நிறைந்த நன்றி சார்

A.R.ராஜகோபாலன் said...

@RVS

வராது வரவே வராது வெங்கட்

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்

இன்னும் நிறைய இருக்கு நண்பரே
நன்றி தங்களின் கருத்துக்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

மன்னையைப்பற்றிய செய்தி தென்னையிலேறி, இளநீர் பறித்து, ஸ்வீட்டாக சாப்பிடு, அதன் வழுக்கைத் தேங்காயையும் தெவிட்டாமல் சாப்பிட்ட திருப்தி அளித்தது. voted

ஷர்புதீன் said...

இரண்டாவது படத்தில் இருக்கும் குளத்துக்கு நேர் எதிரே அடியேனின் நெருங்கிய நண்பன் வீடு கட்டிக்கொண்டு வருகயார், வரும்பொழுது நீங்கள் சொன்னதை எல்லாம் செக் பண்ணுகிறேன். :-)

வை.கோபாலகிருஷ்ணன் said...

மன்னையைப்பற்றிய தங்கள் செய்திகள், தென்னையில் ஏறி, ஸ்வீட் இளநீர் பறித்து, இனிமையாய்க்குடித்து, அதன் பிறகு அதன் வழுக்கையையும் பதமாக இதமாக உண்டது போன்ற ஒரு திருப்தி ஏற்பட்டது.voted

rajamelaiyur said...

மண்ணின் மனத்தை அறிமுக படுத்தியமைக்கு நன்றி


வலைசரத்தில் இன்று

வாழ்க.. ஒழிக… ஒழிக… வாழ்க

ADHI VENKAT said...

மன்னார்குடியின் அழகை, சிறப்புக்களை, அருமையாக விவரித்துள்ளீர்கள். வாய்ப்பு கிடைத்தால் ஒருமுறையேனும் மன்னார்குடியை காணவேண்டும் என்ற ஆவல் உள்ளது. ராஜகோபாலசுவாமி கோவிலுக்கு சென்று வர வேண்டும். சகோ ஆர்.வீ.எஸ் இன் மன்னார்குடி டேஸ்ஸிலும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளேன்.

Unknown said...

//இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். மன்னார்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 84%, பெண்களின் கல்வியறிவு 74% ஆகும். //

as this statistic is mind-blowing there is no surprise in the fact mentioned below ,,,

//ஒரு சிறு பிரச்சனை கூட , மத ரீதியாகவோ அல்லது சாதியரீதியாகவோ வந்தது இல்லை , வரவும் வராது//
asusual very good presention my friend...
sorry for writting in english as my net link is dead slow i hav no patience to wait ,,,
congrats

ஸ்ரீராம். said...

மன்னையின் பெருமை அறிந்தோம். ஒரே முறை கால் பதித்துள்ளேன். கோவிலின் அழகில் மனதைப் பறி கொடுத்துள்ளேன்.

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
மன்னையின் பெருமையை அங்கீகரித்ததற்கு நன்றி ஐயா

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
நண்பரே அங்குதான் என் வீடும் உள்ளது வடகரையில் , நீங்கள் என் வீட்டிற்க்கும் வந்து செக் பண்ணலாமே :-D

A.R.ராஜகோபாலன் said...

@"என் ராஜபாட்டை"- ராஜா
மனம் நிறைந்த நன்றி ராஜா

Unknown said...

voted

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
தங்களின் கருத்துக்கு மிக்க நன்றி
வாருங்கள் மன்னைக்கு
மனம் மகிழ வரவேற்கிறோம்

vidivelli said...

இந்தியாவிற்கு நான் இதுவரைக்கும் வந்ததில்லை
உங்கள் பதிவுகளை வாசித்து பலவற்றை அறிந்து கொண்டேன்...
அருமை....
வாழ்த்துக்கள்!!!

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
எந்த மொழியாக இருந்தாலும்
செயலும் சிந்தனையும் ஒன்றுதானே
நன்றி தங்களின்
நல்ல கருத்திற்கு

சென்னை பித்தன் said...

மன்னை பற்றி ஒரு எழுத்தோவியம்!நன்று!(உங்கள் ஊர் அருகில்தான் என் பூர்விக கிராமம்-ரங்கநாதபுரம்!ஓரிரு முறை போயிருக்கிறேன்!)

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
மனதை மயக்கும்
மந்திரன்
எங்கள் கோபாலன்
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
நன்றி நண்பனே

A.R.ராஜகோபாலன் said...

@vidivelli
ஒருமுறை
இறை நம்பிக்கையும்
கலாச்சார நம்பிக்கையும்
பல மத நம்பிக்கையும்
சாதீய நம்பிக்கையும் கொண்டு
ஒன்றாய் வாழும்
இந்தியா தேசத்திற்கு வாருங்கள்
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
ஐயா
நாட்களின் நகருதலில்
நம் நெருக்கம்
அதிகரிக்கிறது
நன்றி
உங்களின் கருத்திற்கு

Anonymous said...

களவானி படம் எங்க சாரி நம்ம ஊருல எடுத்தது, அத விட்டுட்டீங்களே?

இப்போ நீங்க மன்னார்குடியில தான் இருக்கீங்களா?

இராஜராஜேஸ்வரி said...

மன்னார்குடி குளம் பாதி கோவில் பாதி , நீர் பாதி நிலம் மீதி என்ற சொல்லுக்கு ஏற்ப கோவிலும் குளமுமாக எங்கெங்கும் பசுமையாக இருக்கும் ஊர்//

அருமையான பசுமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.வாழ்த்துக்கள்.

A.R.ராஜகோபாலன் said...

@Heart Rider
நம்ம ஊருக்கு பல சிறப்புகள் இருக்க, சினிமாவின் மூலமாக அறிமுகப் படுத்த வேண்டாமே என்றுதான் எழுதவில்லை ,
இப்போது சென்னையில் வாசம் , அடிக்கடி மன்னார்குடி வாசம் வீசும்

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
நன்றி உங்களின் பசுமையான கருத்திற்கு

சுதா SJ said...

மண்வாசனைமிக்க பதிவு பாஸ் ^_^

சுதா SJ said...

உங்கள் பதிவை படித்ததில் இருந்து, ஒரு தடவையேனும் உங்கள் ஊருக்கு வந்து தங்கி நீங்கள் கூறிய உங்கள் ஊர் சிறப்புக்கள் எல்லாத்தையும் கண்டு அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை வநதுவிட்டது பாஸ்.

ஸ்ரீராம். said...

comment pattern மாற்றியாகி விட்டது போல... சந்தோஷம். விரைந்து திறக்கிறது.

நிரூபன் said...

ஊருக்குரிய அத்தனை சிறப்புக்களையும், ரசனை குன்றாத வகையில் ஓர் பதிவினுள் உள்ளடக்கி, மன்னார்குடியிற்கு, நாங்களும் வந்து- அவ் ஊரின் சிறப்புக்களைத் தரிசித்து மகிழ வேண்டும் எனும் ஆவல் மனதினுள் எழும் வண்ணம் அருமையான கட்டுரைப் பகிர்வாகத் தந்திருக்கிறீங்க,

ஒரு சிறிய வேண்டுகோள்.

இந்த மன்னார் குடி எந்த மாவட்டத்தில் உள்ளது?
சென்னையில் இருந்து எவ்வளவு தூரத்தில் இருகிறது என்று பகிர்ந்திருந்தால்,
எம்மைப் போன்ற வெளியூர் வாசிகளுக்கு இன்னும் சிறப்பாக இருக்கும்.

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
வாங்க தலைவா !
ஒரு முறை வாங்க பின்னே மறக்கவே மாட்டிங்க
தெற்குப் பாத்த வீடு
எதிர கடல் மாதிரியான குளம்
வெளியே வந்தா தென்றல் காத்து
சும்மா பிச்சிக்கிட்டு போகும்
நன்றி கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.

நன்றி நண்பரே
உங்களின் ஆலோசனைப்படி
சகோ நிருபனின் உதவியால் இது சாத்திய மாயிற்று
நன்றி உங்களின்
கவனத்திற்கும்
கனிவிற்கும்

அமைதி அப்பா said...

//மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம்//

கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

*******************

/எங்கள் ஊரில் 108 குளங்கள் உள்ளன//

பொட்டையன் குளம் இதில் உண்டா? அண்மையில் மன்னார்குடி நண்பரைச் சந்தித்தேன். அப்பொழுது இந்தக் குளம் பற்றி பேச்சு வந்தது.
இப்பொழுது அந்தக் குளம் இல்லையென்றும் அதில் கட்டிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

********************************

//பின்லே மேல்நிலைப் பள்ளியும்//

ஒரு காலாத்தில் பல மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள்,ஆசிரியர்கள், மற்றும் எழுத்தாளர்களை உருவாக்கிய புகழ் வாய்ந்த பள்ளியாச்சே! இப்ப எப்படி இருக்கு?

************************

//1991க்கு முன்னாடி எப்படியோ தெரியாது ஆனால் அதற்கு பிறகு மன்னார்குடியை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது, //

:-)))))))))))))))))!?

********************

நான் எழுதியதிலிருந்து எனக்கும் தங்கள் ஊருக்கும் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல:-))))))))))))!

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நன்றி சகோ உங்களின் கருத்திற்கு
என் தவறுதான் செய்திருக்க வேண்டும்
மன்னார்குடி தஞ்சாவூருக்கு அருகே திருவாரூர் மாவட்டத்தில் சென்னையிலிருந்து முன்னூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது

அமைதி அப்பா said...

மிகவும் நல்ல பதிவு. மன்னார்குடியின் சிறப்புக்களை தெளிவாக சொல்லியுள்ளீர்கள். பேருந்து நிலைய சர்பத் கடை(பழனியாண்டவர் தானே?) இப்பொழும் இருக்கிறதா?

தொடருங்கள்....

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா

//மன்னார்குடியில் ஒரு இரவு தங்கினால், ஆயிரம் ஆண்டுகளுக்கு தவம் செய்ததற்கு சமம்//

கேட்கவே மகிழ்ச்சியாக உள்ளது.

நான் இருபது வருடம் முழுமையாக அங்கே இருந்தேன் சார்
*******************

/எங்கள் ஊரில் 108 குளங்கள் உள்ளன//

பொட்டையன் குளம் இதில் உண்டா? அண்மையில் மன்னார்குடி நண்பரைச் சந்தித்தேன். அப்பொழுது இந்தக் குளம் பற்றி பேச்சு வந்தது.
இப்பொழுது அந்தக் குளம் இல்லையென்றும் அதில் கட்டிடம் உள்ளதாகவும் தெரிவித்தார்.

உண்மைதான் சார் , இதில் உண்டு உண்மையான கணக்குப்படி இப்போது எழுபது குளங்கள் மட்டுமே உள்ளது

********************************

//பின்லே மேல்நிலைப் பள்ளியும்//

ஒரு காலாத்தில் பல மருத்துவர்கள், பொறியாளர்கள், அதிகாரிகள்,ஆசிரியர்கள், மற்றும் எழுத்தாளர்களை உருவாக்கிய புகழ் வாய்ந்த பள்ளியாச்சே! இப்ப எப்படி இருக்கு?

அதே தரத்துடன் தொடர்கிறார்கள் சார்

************************

//1991க்கு முன்னாடி எப்படியோ தெரியாது ஆனால் அதற்கு பிறகு மன்னார்குடியை தெரியாதவர்கள் இருக்கவே முடியாது, //

:-)))))))))))))))))!?
:-D :-D :-D :-D :-D :-D :-D:-D:-D

********************

நான் எழுதியதிலிருந்து எனக்கும் தங்கள் ஊருக்கும் சம்பந்தம் இருக்கு என்று நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல:-))))))))))))!

மன்னார்குடி எல்லோருக்கும் சொந்தம், சம்பந்தம் உள்ள ஊர் சார் , நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
சார் நீங்க அடிக்கடி நம்ம ஊருக்கு வந்துருக்கிங்க என நினைக்கிறேன் ,
ஆமாம் பழநிஆண்டவர் 5 ஆம் நம்பர் கடை , அருமையான சர்பத், ரோஸ் மில்க் இப்போ லசியிலும் கலக்குறாங்க .
நன்றி உங்களின் கருத்துக்கு

Madhavan Srinivasagopalan said...

// A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
உட்டா உங்களப் பாக்க வந்துடுறேன் மாதவன் //

உட்டாதான் வருவீங்களா ?

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

என் ஒன்றுவிட்ட அண்ணாவின் மாமனார் மன்னார்குடிதான். 1985களில் பார்த்த மன்னார்குடியை உங்கள் இடுகையின் மூலமாக மறுபடியும் தேடியெடுத்தேன் ராஜு.நன்றி.

வெங்கட் நாகராஜ் said...

மன்னை பற்றி உங்கள் வார்த்தைகளில் படித்த சந்தோஷம்... ஏற்கனவே மைனரின் பதிவுகளில் படித்தபோது ஏற்பட்ட ஏக்கம் - இதுவரை பார்க்கவில்லையே என்ற ஏக்கம் அதிகரித்துவிட்டது நண்பரே... எத்தனை பிறவிகள் எடுக்க வேண்டுமோ தெரியவில்லை நம் தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் சுற்றி வர.... பார்க்கலாம் அடுத்த பயணத்தின் போது செல்ல முடிகிறதா என்று....

நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பரே...

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
மன்னிக்கவும் மாதவன்
ஒரு ப்ளோ ல சொல்லிட்டேன்
வெகு விரைவில் வருகிறேன் அழைப்புக்கு நன்றி, கூப்பிட்டிங்க தானே ???

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
தங்களின் கனிவான கருத்திற்கு நன்றி அண்ணா

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
வாருங்கள் அன்பரே
வரவேற்க காத்திருக்கிறோம்
நூறே கிலோமீட்டர்தான் நெய்வேலியிலிருந்து
நன்றி உங்களின் கருத்திற்கு

அமைதி அப்பா said...

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
//சார் நீங்க அடிக்கடி நம்ம ஊருக்கு வந்துருக்கிங்க என நினைக்கிறேன் //

ஆமாம், நாகை மாவட்டத்துக்காரன்.

//ஆமாம் பழநிஆண்டவர் 5 ஆம் நம்பர் கடை , அருமையான சர்பத், ரோஸ் மில்க் இப்போ லசியிலும் கலக்குறாங்க//

அவர்கள் கிளாஸை வரிசையாக வைத்து சர்ப்பத் போடும் அழகே தனி.

மன்னார்குடி என் வாழ்வில் மறக்க முடியாத ஊர்.

G.M Balasubramaniam said...

அன்பின் ராஜகோபால், விட்டுப்போன பதிவுகளை படிக்கும்போது உங்கள் பிந்தைய பதிவில் ஹரித்ரா நதி எங்கே இருக்கிறது என்று கேட்டிருந்தேன். இப்போது இதை படிக்கும்போது விடை கிடைத்து விட்டது. நண்பன் ஒருவன் திருமணத்துக்கு மன்னார்குடி சென்றீருந்தேன். விளக்கு வைத்த பிற்கு அவ்வூர் அடைந்திருந்தோம். இரவு தங்கி மறுநாள் முஹூர்த்தம் பார்த்து உடன் திரும்பி விட்டோம். மோட்டர்ர்சைக்கிள் பயணம் . அந்த மாலை கோயிலை வெளியிலே சுற்றும் போது மதிலை சுற்றி மிகவும் அசிங்கமாக இருந்தது கண்டு, மனம் வருந்தியது உண்டு. மன்னார்குடியை நினைத்தால் கோயிலை சுற்றி இருப்பவருக்கு அதன் புனிதம் தெரியாமல் இருப்பது நினைத்து வேதனைதான் தோன்றும்.

A.R.ராஜகோபாலன் said...

@G.M Balasubramaniam
மதி நிறை ஐயா
வணங்கி மகிழ்கிறேன்
உண்மைதான் ஐயா அது மாதிரி விரும்பா தகாத நிகழ்வுகள் தவிர்க்கப்படவேண்டும் என்பதுதான் என் விருப்பமும் , நன்றி உங்களின் கனிவான தொடர் கருத்திற்கு. உங்களின் கருத்திற்கு மனம் மகிழ்ந்த நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@அமைதி அப்பா
///மன்னார்குடி என் வாழ்வில் மறக்க முடியாத ஊர்.////

ரொம்ப சந்தோஷம் சார்,

vetha (kovaikkavi) said...

மன்னை பற்றி பல புதிய செய்திகள். சுவையான கட்டுரை.

வேதா. இலங்காதிலகம்.
http://www.kovaikkavi.wordpress.com