Monday, 4 July 2011

அவசரகோலத்தில் அள்ளித் தெளிக்கும் ஜெயலலிதா அரசு


            ஒரு நிலையான நல்லாட்சி தரும் அரசை தருவேன் என தமிழக மக்களிடம் வாக்குறுதி அளித்து  அதை நம்பிய மக்கள் வாக்களித்ததால் ஆட்சிக்கு வந்த செல்வி.ஜெயலலிதா, ஆட்சி ஏற்றதிலிருந்து நடத்திவரும் அவசர தர்பாரை பார்க்கையிலே இது மக்களை எங்கே கொண்டு செல்லும் என்று தெரியவில்லை.நான் எனது முந்தய பதிவுகளில் சொல்லியதைப் போலே சமச்சீர் கல்வியிலும் , சட்டப் பேரவை மாற்றத்திலும் அவசர முடிவெடுத்த நம் முதல்வர், இப்போது தன் தேர்ந்தெடுத்த  அமைச்சரவையிலும் அதிரடியை காட்டியிருக்கிறார்.




           சென்ற ஜூன் இருபத்தி ஏழாம் தேதி ஆறு அமைச்சர்களின் துறைகளை மாற்றியமைத்த முதல்வர் , நேற்று சட்டம் மற்றும் சிறைத்துறை அமைச்சர் திரு. இசக்கி சுப்பையாவை பதவியேற்ற இரண்டாவது மாதத்திலேய அமைச்சரவையிலிருந்து நீக்கி இருக்கிறார்,கூடவே போனசாக ஐந்து அமைச்சர்களின் துறையும் மாற்றியமைக்கப் பட்டுள்ளது, இதற்கெல்லாம் என்ன காரணம் என்று அந்த அமைச்சர்களே அறிவார்கள எனபது சந்தேகமே.

           பத்தாண்டுகள் முழுமையாக தமிழக முதல்வர் பதவியை அலங்கரித்தவர், பதினைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சட்ட பேரவை உறுப்பினர் , எதிர்கட்சி தலைவர், மிகப் பெரிய கட்சியின் தலைவி இப்படி பல தகுதிகளை தன்னுள்ளே கொண்டுள்ள நம் முதல்வர் இப்படி ஏன் தன் அமைச்சரவை சகாக்களை மாற்றியும் , நீக்கியும் வருகிறார் என்று தெரியவில்லை, கடந்த ஐம்பது நாட்களில் அவர்கள் என்ன செய்து விடமுடியும் அல்லது என்ன செய்திருக்க முடியும் . தன் துறையையும் அதிகாரிகளையும் பற்றி தெரியவே மூன்று மாதங்களுக்கு மேலாக ஆகும், இன்னும் பாதிக்கு மேற்ப்பட்ட அமைச்சர்கள் தன் துறை ரீதியான கூட்டங்களையே நடத்த துவங்கவில்லை அதற்குள் ஏன் இந்த மாதிரியான அவசம், இவர் அவர்களிடம் என்ன எதிர் பார்த்தார் அவர்கள் எதை செய்யவில்லை என்றே தெரியவில்லையே.

         இப்படி சில நாட்களிலேயே இப்படி அதிரடி மாற்றங்களை நிகழ்த்துவதற்கு என்ன காரணம் இருக்க முடியம் , ஒன்று அவர்கள் தகுதி இல்லாதவர்களாக இருக்க வேண்டும் அல்லது அவர்கள் தவறு செய்தவர்களாக, செய்கிறவர்களாக இருக்கவேண்டும் , எது எப்படி இருந்தாலும் அந்த மாதிரியான ஆட்களை தன் அமைச்சரவை சகாவாக தேர்ந்தெடுத்தது யாரின் குற்றம், நம் பாரதப் பிரதமராவது கூட்டணி நிர்பந்த்ததினால் என்று சொல்லி சமாளிக்கலாம், நம் முதல்வருக்கு அது மாதிரியான எந்தப் பிரச்சனையும் கிடையாதே பின்னே ஏன் இப்படி ஒரு தடுமாற்றம்.

        ஒவ்வொரு துறை மாற்றத்தின் போது அந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் போய் அந்த துறையை புரிந்துகொண்ட செயலாற்ற குறைந்தது மூன்று மாதமாவது ஆகும் , இப்படி துறையையும் அமைச்சரையும் மாற்றிக் கொண்டே இருந்தால் மக்களின் நலனில் எப்படி முன்னேற்றம் வரும் இல்லை அவர்கள் தான் எப்படி முழுமையாக செயலாற்ற முடியும்.ஒரு நல்ல வெளிப்படையான, தூய்மையான அரசை செல்வி .ஜெயலலிதாவின் அரசிடம்  எதிர் பாக்கும் மக்களின் நம்பிக்கையை நம் முதல்வர் வீணடித்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்
அன்பன்
ARR                 

31 comments:

Yaathoramani.blogspot.com said...

மிகச் சரியான கருத்து
அவர்கள் மந்திரி என்றால் என்ன என்பதைக் கூட
புரிந்து கொண்டிருக்கமாட்டார்கள்
அதற்குள் அவர்களை மாற்றுதல் என்பது
நல்ல தலைமைக்கு அழகல்ல
உண்மையை உரக்கச் சொல்லிப்போகும்
தரமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

தமிழ் உதயம் said...

தொடர்ந்து அவநம்பிக்கை ஏற்படும் விதமாகவே ஜெ நடந்து கொள்ளக்கூடாது.

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

உங்கள் பார்வை நடுநிலையோடு பார்க்கிறது எப்போதும்.

வாழ்த்துக்கள் ராஜு.

Unknown said...

சகோ
ஒவ்வொரு நாளும் தரமுயர்ந்த பதிவுகள்

தருகின்றீர் எதையும் ஆய்ந்து எழுதும் உங்கள்
ஆற்றல் வளர வேண்டுகிறேன்
இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்(து)
அதனை அவன்கண் விடல்(குறள்)

இனி என்ன செய்வது..?
புலவர் சா இராமாநுசம்

இராஜராஜேஸ்வரி said...

ஒரு நல்ல வெளிப்படையான, தூய்மையான அரசை செல்வி .ஜெயலலிதாவிடம் அரசிடம் எதிர் பாக்கும் மக்களின் நம்பிக்கையை நம் முதல்வர் வீணடித்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்//

அனைவரின் எதிர்பார்ப்பும் அதுதானே.

Unknown said...

பலரின் மனக்குமுறலை பதிவிட்டு மனம் கவர்ந்து விட்டீர் !!படித்தேன் பிடித்தது ..வாக்களித்தேன் ...சரி ஒரு செய்தி நம்மை ஒருவர் மாரத்தான் தொடருக்கு அழைத்து உள்ளார் ..நாளை நான் ரெடி அப்ப நீங்க ரெடியா

A.R.ராஜகோபாலன் said...

@Ramanai
உங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
மிக்க நன்றி
ரமணி சார்

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
உங்களின் கருத்திற்கு நன்றி நண்பரே

A.R.ராஜகோபாலன் said...

@சுந்தர்ஜி
உங்களின் வருகைக்கும்
வாழ்த்திற்கும்
மிக்க நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
நன்றி ஐயா
உங்களின் கருத்துக் குரலுக்கும்
வள்ளுவனின் குறளுக்கும்

A.R.ராஜகோபாலன் said...

@இராஜராஜேஸ்வரி
உங்களின் கருத்திற்கு மிக்க நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
உங்களின்
வருகைக்கும்
வாழ்த்திற்கும்
வாக்கிற்கும்
மிக்க நன்றி நண்பா

சென்னை பித்தன் said...

சிறிது நிதானத்துடன் செயல்பட்டு நல்லாட்சி தரவேண்டும் என விரும்புகிறேன்!நம்புவோம் மாற்றம் வருமென்று!

Unknown said...

உண்மையான ஆதங்கம் தான் பாஸ்...ஆனா என்ன ஆட்சி மாறின சந்தோசத்தில பண்றாங்க போல விடுங்க~

வெங்கட் நாகராஜ் said...

நடுநிலையான ஒரு பார்வை... தொடர்ந்து எழுதுங்கள்...

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
ஐயா உங்களின் நம்பிக்கை மெய்யாகட்டும்
நன்றி தங்களின் கருத்துக்கு

A.R.ராஜகோபாலன் said...

@@மைந்தன் சிவா
நீங்க சொன்னா சரிதான் தலைவா
நன்றி உங்களின் கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்

உங்களைப் போன்றோருடைய ஆதரவில் தொடர்ந்து எழுதுவேன் அன்பரே
நன்றி உங்களின் கருத்திற்கு

வை.கோபாலகிருஷ்ணன் said...

//ஒரு நல்ல வெளிப்படையான, தூய்மையான அரசை செல்வி .ஜெயலலிதாவிடம் அரசிடம் எதிர் பாக்கும் மக்களின் நம்பிக்கையை நம் முதல்வர் வீணடித்துவிடக்கூடாது என்பதே என் எண்ணம்//

அனைவர் எண்ணமும் அதுவே தான். ஆனால் ஏதாவது அதிரடிகள் செய்து கொண்டே தான் இருப்பார்கள். அது தான் அவர்களின் ஸ்பெஷாலிடி. அதில் ஏதாவது காரணம் இருக்கும். அதெல்லாம் நமக்குத் தெரியாது/புரியாது. தேவ ரகசியங்கள் போல ராஜாங்க ரகசியங்கள், ஸ்வாமி.

Voted 9 to 10 in Indli

ஸ்ரீராம். said...

இரண்டு குறள்கள் நினைவுக்கு வருகின்றன. 'இதனை இவன் முடிப்பான் என்றாய்ந்து'....மற்றும் 'எண்ணித் துணிக கருமம்'....
வைகோ சாரின் கருத்து உண்மை. இந்தத் துணிச்சல் மற்ற ஆட்சியாளர்களுக்குக் கிடையாது என்பதும் உண்மை!.

Madhavan Srinivasagopalan said...

// ஒவ்வொரு துறை மாற்றத்தின் போது அந்த துறை சம்பந்தப்பட்ட அமைச்சர் போய் அந்த துறையை புரிந்துகொண்ட செயலாற்ற குறைந்தது மூன்று மாதமாவது ஆகும் //

அதெல்லாம் அந்தக் காலம்..
இப்பலாம் ஒரே நாளுல மக்களுக்கு நல்லத எப்படி வேணுமின்னா செய்யலாம்.. நீங்க அர்ஜுன் நடிச்ச 'முதல்வன்' பாக்கலையா ?

---- சும்மா.. தமாசுக்குத்தான்..

நெல்லி. மூர்த்தி said...

நம் முதல்வர், கடந்த காலங்களில் ஆர்ப்பாட்டாமாக புரிந்த துக்ளக் தர்பாரினை தற்போது அடக்கத்துடன் வாசிக்கின்றாரோ என்றேத் தோன்றுகிறது.

A.R.ராஜகோபாலன் said...

@நெல்லி. மூர்த்தி
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
நன்றி
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
நன்றி நண்பரே
உங்களின்
உன்னத கருத்திற்கு

நகைச்சுவை-அரசர் said...

நல்லா இருக்கு(டா) கால்குல்யதேவ்..! சுவையான அலசல்.. தொடர்க..!

A.R.ராஜகோபாலன் said...

@நகைச்சுவை-அரசர்
உன்னுடைய கருத்திற்கும்
வாழ்த்திற்கும் பிறகே
என் எழுத்து
முழுமை அடைந்தது
இது மட்டும் போதாது
something hheeeeeeeeeeh

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
இப்போது தான் வலை மேய நேரம் கிடைத்திருக்கிறது,
தாமதமான வருகையுடன்....
நிரூபன்

நிரூபன் said...

கலைஞரால் மக்களின் வாழ்வினை மேம்படுத்த முடியாத நிலமை இருக்கையில் அனைவரும் அம்மாவை ஆதரித்தார்கள்.
அம்மா தான் கொடுத்த வாக்குறுதியினை நிறைவேற்றுவார்,
நல்லாட்சி தருவார் என்றும் நம்பியிருந்தோம்,
ஆனால் அம்மாவே அதிரடி முடிவுகளை எடுத்து, வாக்குறுதிகளை நிறைவேற்றாது காலத்தை விரயம் செய்கையில் இனிமேல் யாரிடம் சொல்லி முறையிட முடியும்?

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நன்றி உங்களின் கருத்துக்கு
உங்களின் அன்பிற்கும்
கனிவிற்கும்
கருத்திற்கும் மிக்க நன்றி சகோ