கடந்த ஜூன் இருபதாம் தேதி மீன் பிடிக்க சென்று இலங்கை கடலோரப்படையால் சிறைப்பிடிக்கப்பட்ட நம் தமிழக ராமேஸ்வரம் மீனவர்கள் இருபத்தி மூன்று பேரும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா , அனுராதபுரம் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கிறார்கள். கடலில் எல்லையே தெரியாத நிலையில் வழி தவறியோ இல்லை அதிக மீனுக்கு ஆசைப்பட்டோ எல்லை தாண்டிவிடும் இவர்களை எச்சரித்து அனுப்பாமல், அவர்கள் நாட்டு முன்னேற்றத்திற்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுக்கும் இந்திய குடிமகன்களை சங்கிலியால் பிணைத்து , மனநோயாளிகள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறையில் அடைத்திருக்கிறார்கள்.
நம் தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த நம் ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் மனநோய் இருக்கலாம் , ஆனால் தன குடும்பத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் பயணம் மீனவர்களை மனநோயாளிகளுடன் அடைத்தது திமிரின் உச்சம் அல்லவா?, அந்த மனநோயாளிகள் அந்த இடத்திலேயே மலமும் , சிறுநீரும் கழித்து இருக்க அந்த துர் நாற்றம் பிடித்த சிறையில் இத்தனை நாட்கள் இருந்திருக்கிறார்கள், உலகத்தின் எந்த மூலையிலும் எந்த நாட்டு மீனவனுக்கும் நிகழாத நிகழக்கூடாத நிகழ்வு இது.
இவர்களை விடுதலை செய்தவுடன் நம் நாட்டிற்கு வந்து இவர்களுக்கு இழைத்த கொடுமையெல்லாம் சொல்வார்கள் என இலங்கையின் ஆட்சியாளர்கள் அறியமாட்டார்களா, இருந்தும் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்றால் நம் ஆட்சியாளர்களின் முதுகெலும்பில்லாத, சுய உணர்ச்சி இல்லாத செயலை அறிந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம். உலகத்திலேயே மதிப்பே இல்லாத ஒன்று தமிழக மீனவனின் உயிரும் உடமையும் தான்.
உலகத்திலேயே பெரிய கடற்படைகளுள் ஒன்றாக கருதப்படும் நம் கடற்ப்படை என்ன செய்து கொண்டு இருக்கிறது , அவர்களின் கைகளை கட்டி போடுபவர்கள் யார் , நம் நாட்டின் எல்லை பகுதிகளை கண்காணிப்பது அவர்களின் வேலை அல்லவா , நம் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி போகும் போது ஏன் அவர்கள், இவர்களை தடுத்து அனுப்பக்கூடாது , எதற்கெல்லாமோ யாருக்கெல்லாமோ துணை கோளை அனுப்பி உளவு பார்க்கும் இந்திய அரசு ஏன் மீனவர்களுக்காக ஒரு செயற்கை கோளை அனுப்பி அவர்களின் நடமாட்டத்தை கண்காணித்து நல்வழிப் படுத்தக்கூடாது .
மனம் இருந்தால் மார்க்கம் உண்டு .................................................
இனியாவது இன்றிலிருந்தாவது , ஒரு மீனவனும் சிறை பிடிக்க படவோ , உயிர் குடிக்க படவோ கூடாது என்பது என் அவா , நடக்குமா..........
அன்பன்
ARR
28 comments:
//இனியாவது இன்றிலிருந்தாவது , ஒரு மீனவனும் சிறை பிடிக்க படவோ , உயிர் குடிக்க படவோ கூடாது என்பது என் அவா , நடக்குமா........//
எல்லோருடைய அவாவும் இதுதான்
இன்று என் பதிவில்
ப்ளாக்கரில் Drop-Down Navigation Bar உருவாக்குவது எப்படி?
இனியாவது இன்றிலிருந்தாவது , ஒரு மீனவனும் சிறை பிடிக்க படவோ , உயிர் குடிக்க படவோ கூடாது என்பது என் அவா , நடக்குமா..////நடக்கணும் !!!!!!!!!
Judge a man by his questions rather than his answers. என்னும் மொழிப்படி நீங்கள் சிறந்த மனிதர் மற்றும் சிறந்த பதிவர் என்பதை நிருபித்து விட்டீர்கள் .வாழ்த்துக்கள் நண்பா தொடருங்கள்
@ரியாஸ் அஹமது
நம் எண்ணம் ஈடேற வேண்டும் நண்பா
நன்றி தங்களின் கருத்துக்கு
@ரியாஸ் அஹமது
தற்பெருமை வேண்டாமே நண்பா
நன்றி உங்களின் கருத்துக்கு
@மதுரன்
நன்றி உங்களின் கருத்துக்கு
மதியமே வந்தாச்சே
இந்திய அரசு நினைத்தால் எவ்வளவோ செய்யலாம்!
இனியும் நடக்கக் கூடாது என்பதே 'எங்கள்' அவாவும்..!
@சென்னை பித்தன்
உண்மை...!
உண்மை.....!
உண்மை............!
நன்றி உங்களின் கருத்துக்கு
@ஸ்ரீராம்.
நன்றி உங்களின் கருத்துக்கு
நம் தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த நம் ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் மனநோய் இருக்கலாம் , ஆனால் தன குடும்பத்திற்காக உயிரை பணயம் வைத்து கடலில் பயணம் மீனவர்களை மனநோயாளிகளுடன் அடைத்தது திமிரின் உச்சம் அல்லவா?,//
ஆமாம் பாஸ், சொந்த நாட்டில் வாழும் தமிழர்களையே மதிக்கும் மனபாங்கில்லாத இனவாதப் பௌத்த அரசு, எம் உறவுகளுக்கும் இதே நிலமையினைக் கொடுப்பது வேதனையினைத் தருகிறது.
உண்மையில் ஆயுதம் கொடுத்து, போருக்குப் பின்னணியில் நின்ற டில்லித் தலமைகள் இவற்றினை அறிந்தும், இலங்கையின் நடத்தைகள் தொடர்பில் மௌனமாக இருப்பது தான் இன்னும் வேதனையாக இருக்கிறது.
இனியாவது இன்றிலிருந்தாவது , ஒரு மீனவனும் சிறை பிடிக்க படவோ , உயிர் குடிக்க படவோ கூடாது என்பது என் அவா , நடக்குமா.......... //
பாஸ், இந்த எதிர்பார்ப்போடு தான் நாமும் இருக்கிறோம். பௌத்த ஆதிக்கவாதம் எப்போது ஓய்கிறதோ, அப்போது தான் எமக்கெல்லாம் விடிவு வருமோ என்று எண்ணத் தோன்றுகிறது,
இன்னோர் வகையில் இந்திய கடற்படை இலங்கையின் திமிர் பிடித்த விடயத்தில் வாய் பொத்தி வேடிக்கை பார்ப்பது ஆச்சரியமளிக்கிறது.
நாங்கள் தமிழர்கள் என்பதால் தான் எல்லோரும் புறக்கணிக்கிறார்கள் என நினைகிறேன்.
வணக்கம் தோழரே,
இன்றுதான் தங்களது வலைப்பதிவில் காலடி வைக்கும் உத்தமனானேன் ( ஹி..ஹி..ஹி )
இந்த உத்தமனுக்கும் இடம் தந்த ஆய்தத்துக்கு நன்றி..
உங்கள் பதிவுகள் மட்டுமல்ல..
சுயபுராணமும் சூப்பரோ சூப்பர் ...
தொடர்ந்து வருகிறேன்..
தொடர்ந்து வாருங்கள் சிவயசிவ - விற்கும்.
http://sivaayasivaa.blogspot.com
நன்றி..
ARR!தமிழகத்திலிருந்து இவ்வளவு குரல்கள் எழும்பியும் மத்திய அரசு மௌனம் சாதிப்பதும்,இலங்கை கடற்படையின் அத்துமீறல்களுக்கும் பின்பான பின்புலம் என்ன என்பது எனக்கு இன்னும் புரியாத புதிராகவே இருக்கிறது.
மன்மோகனோ இலங்கை குறித்து மிகவும் complex issues உள்ளதை ஜெயலலிதா புரிந்துகொள்வார் என்று கூறிவிட்டு தப்பித்துக்கொள்கிறார்.
நம்மை அறிந்தும்,அறியாமலும் இந்தியாவின் தெற்கு எல்லை பாதுகாப்பற்ற தன்மைகளை விதைக்கிற்து என்பது மட்டும் புரிகிறது.
@நிரூபன்
தங்களின் அருமையான கருத்திற்கும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடிற்க்கும் நன்றி சகோ
@நிரூபன்
தங்களின் அருமையான கருத்திற்கும் உணர்வுப்பூர்வமான வெளிப்பாடிற்க்கும் நன்றி சகோ
@சிவ.சி.மா. ஜானகிராமன்
உத்தம தோழரின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழுநன்றி
@ராஜ நடராஜன்
தன கடமையை சரிவர புரியாததாலும்
புரிந்தும் சரிவர செயல்படாததாலும்
மனிதம் மரத்து போனதாலும் வந்த சாபம் சார் இது வேறென்ன சொல்ல
நன்றி தங்களின் கருத்துக்கு
எவ்வளவு தான் நீங்களும், நானும் http://sivakumarankavithaikal.blogspot.com/2011/01/blog-post_26.html கரடியாய் கத்தினாலும் யார் காதிலும் விழப் போவதில்லை.
திகார் ஜெயிலில் இருப்பவர்களைப் பார்த்து கண்ணீர் விட்டாராம் தமிழினத் தலிவர். வவுனியா சிறையில் அடைபட்டவர்களுக்காக கண்ணீர் சிந்த நாமிருக்கிறோமே,
//இனியாவது இன்றிலிருந்தாவது , ஒரு மீனவனும் சிறை பிடிக்க படவோ , உயிர் குடிக்க படவோ கூடாது என்பது என் அவா , நடக்குமா.......... //
எங்கள் அவாவும் அதுவே..
நடக்குமா... பார்க்கலாம்..
@சிவகுமாரன்
உண்மையான கருத்து நண்பரே
எல்லோருக்கும் அவரவர் சுற்றம் தான் முக்கியம் என சுயநலவாதிகளாக இருக்கிறார்கள்
@Madhavan Srinivasagopalan
இந்த ஆசை நிறைவேறவேண்டும் மாதவன்
நன்றி உங்களின் கருத்துக்கு
நம் எண்ணங்களும் அவாவும் நிறைவேற வேண்டுவோம் அண்ணா. நிச்சயம் நல்லநட்க்கும் என்றை நம்பிக்கையில்.. உங்கள் ஒவ்வொரு பதிவும் சமூக அக்கரை கொண்டதாக இருப்பது நெகிழ்வாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் அண்ணா..
அண்ணா உங்களை ஒரு தொடருக்கு அழைத்துள்ளேன்
http://niroodai.blogspot.com/2011/07/blog-post_04.html
நீங்களும் பங்குகொள்ளுங்கள். பகிர்ந்துகொள்ளுங்கள்...
@அன்புடன் மலிக்கா
நன்றி சகோதரி தங்களின் அறிவார்ந்த கருத்துக்கும் உற்சாகத்திற்கும்
என்னையும் தொடர் பதிவுக்கு அழைத்தமைக்கு நன்றி , ஆனாலும்
எனக்கு முன்பே என் நண்பன் RVS (தீராத விளையாட்டு பிள்ளை ) மன்னார்குடி டேஸ் என்று தனிப் பதிவே போட்டு அவனின் சொல்லாட்சியில் பிளந்து கட்டியிருக்கிறான்.
ஆனாலும் உங்களின் அன்பு கட்டளையை ஏற்று வெகு விரைவில் என் மண்ணின் பெருமையை மன்னையின் அழகை சுமாராகவாவது எழுத முயற்சிக்கிறேன் , நன்றி
@RAMVI
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே
நம் தமிழ் இனத்தை அழித்த இலங்கை அரசுக்கு கோடி கோடியாக கொட்டிக்கொடுத்த நம் ஆட்சியாளர்களுக்கு வேண்டுமானால் மனநோய் இருக்கலாm very nice
@மாலதி
Thank you very much Sagothari
Post a Comment