Tuesday 5 July 2011

நலியாத நட்பு - நண்பேன்டா பகுதி - 3


புணர்ச்சி பழகுதல் வேண்டா -உணர்ச்சிதான் 
நட்பாம் கிழமை தரும்

             என்ற வள்ளுவ மொழிகேற்ப நட்பின் வலிமையை வளமாய் சொல்லி என்னை தொடர வேண்டிய அன்பு நண்பர்கள் ரஹீம் கஸாலி  மற்றும் 
 இருவரையும் என் நட்பால் வணங்கி தொடங்குகிறேன் இந்த பதிவை 



நண்பர்கள் நம் நிழல் கடவுள்கள் , நம் உணர்வை கொட்ட , காட்ட , பகிர , அழ , சிரிக்க , சந்தோஷிக்க இப்படி நாமாகி, நாமும் ஆனவர்கள், சுயநலம் இல்லாத சுயம்பு அவர்கள் . எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இனிமையானவர்கள்,
உரிமை கொண்டாடும் உறவை விட, உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது. நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை, தவறு செய்வதும் இல்லை.இப்படி நட்பை பற்றி ஆராதித்துக் கொண்டே இருக்கலாம்.

இனி நண்பர்களின் அணிவரிசை ...........,
ஆர் .ஸ்ரீராமன்      

           என் நினைவு தெரிந்தது முதலே  என் நண்பன், என் குடும்பத்தை தெரிந்த நாளிலிருந்தே இவனை எனக்கு தெரியும். இன்றும் இவனைப் பற்றி நினைத்தாலே அந்த தோள் மாட்டி டிராயருடன் கோப்லி .... கோப்லி .... என்று  கண்கள் விரிய பேசி மகிழ்ந்த காலங்கள் இன்றும் நீங்காத நினைவுகள் , நாங்கள் இருவரும் இணைந்து அடிக்காத லூட்டிகள் இல்லை , வீட்டிற்கும் அடங்கியது இல்லை, என் அம்மா "என்ன ஸ்ரீராமா சாப்டியா" என்றால் "இல்லை மாமி காலையிலிருந்தே கொலை பட்னி" என்று எங்கள் வீட்டிலேயே உணவருந்தி இருப்பான், என் மூத்த சகோதரிகள் இன்றும் இவனைப் பற்றி பேசும் போது கொலை பட்னி என்று பேசி மகிழ்வோம், ஆனாலும் ஒருவரை ஒருவர் அவரவர் அம்மாக்களிடம் மாட்டிக் கொடுப்பதில் வல்லவர்கள் ஆயினும் அந்த கோபங்களை தாண்டியும் வளர்ந்து துளிர் விட்டது எங்கள் நட்பு.என் வாழ்வின் முதல் நட்பு இவனுடையது.

கே .ஸ்ரீதர்        
          
          என்னுடைய இன்னொரு மிகப் பால்ய நண்பன் , நான், ஸ்ரீதர், ஸ்ரீராம் மூவரும் சேர்ந்து செய்யாத வேலைகள் இல்லை , எங்கள் இருவரையும் விட ஸ்ரீராமன் ஒரு வருடம் இளையவன் , ஆனால் ஸ்ரீதர் என், எல் கே ஜி நண்பன் , ஒரே தெரு என்றாலும் இவனை ஸ்கூலில் பார்த்ததாகத்தான் ஞாபகம்.ஆறாம் வகுப்புவரை ஒரே வகுப்பில் படித்தோம் , நான் எழுதிய முதல் கடிதம் இவனுக்காகத் தான் இருக்கும் ,அடிக்கடி இருவரும் சண்டை போட்டுக்கொள்வோம் கொஞ்ச நேரம் கழித்து அவனோ இல்லை நானோ கடிதம் எழுதுவோம் சமாதானத்திற்கு, இவனுடைய கண்கள் பெரிதாக அழகாக இருக்கும் இதற்காகவே இவனை என் அண்ணன் மு(ழி)ளியாண்டி என செல்லமாய் அழைப்பதுண்டு,நட்பையும் கடந்து நல்லதொரு புரிதல் இவனிடம் உண்டு .


          பதிவுலகில் இவனை தெரியாதவர்கள் இருக்க முடியாது, என்னுடைய உயிர் நண்பன், பதிவுலகை எனக்கு அறிமுகப்படுத்தியவன், என் பன்னிரண்டு வயது முதலே என் அன்பை பகிர்ந்த நண்பன், இவர்கள் வீட்டில் தான் முதன் முதலாக கலர் டி வி யை பார்த்தோம், எங்களுக்கு முன்னரே எங்களின் அம்மாக்கள் நண்பிகள், இன்றுவரை சுயநலம் இல்லாத , சுயம் இழக்காத நண்பன். எங்கள் வயதொத்தவர்கள் அனைவரும் இவன் வீட்டில்தான் குரூப் ஸ்டெடி, அனைவருக்கும் அலுக்காமல் எளிதாக சொல்லித்தரும் இவனின் அறிவாற்றல் சொல்ல முடியாதது.கிரிக்கெட்டில் சூரப்புலி , இவனுடைய வளர்ச்சியை என்னுடைய வளர்ச்சியாகவே பார்க்க பக்குவப்பட்ட நட்பு எங்களுடையது.நான் முதன் முதலாக சென்னை வந்த போது நான் தேடி சென்றதும் நாடி சென்றதும் இவனைத்தான், அப்போது பல உதவிகளை செய்திருக்கிறான். வாழைப் போல எப்போதும் எங்கேயும் எதிலும் னக்கு உதவிகளை மட்டும் செய்து பழக்கப் பட்டவன் , ஆயினும் இன்றுவரை நான் அவனுக்கு ஒன்றுமே செய்ததில்லை.    


ஆர். செந்தில் குமார் / என் . ஸ்ரீனிவாசன்  

     இருவருமே என் கல்லூரி நண்பர்கள் , என் வாழ்வை வளமாக்கியவர்கள், வாழ்வில் வசந்தத்தை வரவழைத்தவர்கள் , என்னை முழுதாய் வழிநடத்தியவர்கள் , நடத்துபவர்கள்.செந்தில் என் முதல் வருட கல்லூரி முதல் நண்பன், எள்ளளவும் கள்ளமில்லா குழந்தை மனிதன், முதல் வருடம் எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் அதன் படி அவன் நன்றாக இருந்தால் என்னை ஆதரிப்பதாகவும் , நான் நன்றாக இருந்தால் அவனை ஆதரிப்பதாகவும் ஒப்புக்கொண்டோம் , அதன் படி கல்லூரி வாழ்க்கை முடிந்தவுடன் நான் வணிகம் செய்ய பொருளுதவி செய்தவன் , இவனுடனாவது ஒப்பந்தம் , ஒப்பந்தமே இல்லாமல் என்னை ஆதரித்தவன் ஸ்ரீனிவாசன், இவர்கள் இருவரின் பணஉதவியால் தான் நான் தன்னம்பிக்கையுடம் வணிகம் தொடங்கினேன் , நான் வணிகத்தில் நிலையாகும் வரை என்னை ஆதரித்தவர்கள் இவர்கள், இன்னும் சொல்வதென்றால் என் தகப்பனைப் போன்றவர்கள், இன்றுவரை என் வாழ்வின் முக்கிய முடிவுகளை நான் ஸ்ரீனிவாசனை கலக்காமல் எடுப்பதேயில்லை.

மேலே சொன்ன நண்பர்களை விட அதிகம் பேர் என்னை கலந்து கடந்தவர்கள் உண்டு , என் நட்பு வட்டத்தின் ஆரம் மிக அதிகம், இன்றும் இவர்களுடனான என் நட்பு தொடர்கிறது, இன்றுவரை என் நண்பர்கள் யாரையும் நான் இழந்ததில்லை எனபது என் நட்பின் சிறப்பு இன்னும் கர்வம் .

அன்பன்
ARR

          

                     

45 comments:

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அந்த நாள் ஞாபம் நெஞ்சிலே வந்ததே
நண்பனே நண்பனே.. நண்பேனே..

அன்று போல் இந்த நாள் ?...

வாழ்த்துக்களுடன்..


http://sivaayasivaa.blogspot.com

கவிதை வீதி... // சௌந்தர் // said...

நட்பின் நீளம் பெரியதுதான்...

இந்தப்பதிவும் நிறைபதிவுகள் வரவேண்டும் என்று நினைக்கிறேன்..

வை.கோபாலகிருஷ்ணன் said...

அருமையான பதிவு. பெருமையான நட்புகள்.
நல்ல நினைவலைகள். நன்றி. பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

voted 3 to 4 in indli

ஸ்ரீராம். said...

நட்புக்கு மரியாதை செய்திருக்கிறீர்கள்...

சென்னை பித்தன் said...

நன்பர்களை நினைவு கூர்ந்த விதம் அருமை!

rajamelaiyur said...

Ya . . Friendship never fails. . .Ya . .

ஷர்புதீன் said...

நீங்கள் தைரியமாக உங்கள் நண்பர்களிடம் "நண்பன்டா" என்று சொல்லிகொள்ளலாம்.

Unknown said...

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் வள்ளுவனே
நட்பு, நட்பு ஆராய்தல் என்று இரண்டு அதிகாரங்களை வகுத்துள்ளான் என்றால் நட்பின்
பெருமையை சொல்லவும் வேண்டுமோ
தொடரட்டும் அறிமுகப்படலம்
புலவர் சா இராமாநுசம்

RVS said...

நண்பா!! I am floored!!! ;-))))

RVS said...

ஸ்ரீராமனை லிஸ்ட்ல ஃபர்ஸ்டா சொல்லியிருப்பது அருமை! ;-))

தமிழ் உதயம் said...

நண்பர்களை பகிர்ந்த ஞாபகம் அருமை.

A.R.ராஜகோபாலன் said...

@சிவ.சி.மா. ஜானகிராமன்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@# கவிதை வீதி # சௌந்தர்
என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@வை.கோபாலகிருஷ்ணன்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@ஸ்ரீராம்.
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@சென்னை பித்தன்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@என் ராஜபாட்டை"- ராஜா
THANK YOU FRIEND

A.R.ராஜகோபாலன் said...

@ஷர்புதீன்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@புலவர் சா இராமாநுசம்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@RVS
உன் குணத்தில் துளிதானே சொல்லியிருக்கிறேன் நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@RVS
நன்றி நண்பா

A.R.ராஜகோபாலன் said...

@தமிழ் உதயம்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

ரஹீம் கஸ்ஸாலி said...

nice. Friendship never fail & fallnice. Friendship never fail & fall

வெங்கட் நாகராஜ் said...

நண்பர்கள் தானே நமக்கு எல்லாமே நம் சிறு வயதில்.... வளர்ந்த பின்னும் நண்பர்களுடன் தான் நம் நாளில் நிறைய நேரமுமே.... நண்பேண்டா... பதிவு என் நண்பர்களைப் பற்றிய நினைவுகளையும் தூண்டிவிட்டது..... நன்றி நண்பரே....

Madhavan Srinivasagopalan said...

ஸ்ரீராம், ஸ்ரீதர், ஆர்.வீ.எஸ்.. தெரிந்த நண்பர்கள்..
-- ஹரித்ராநதி குழு ஒரு பொக்கிஷம்.. இனிமையான நாட்கள் அவை..
ஸ்ரீநிவாசன், ஆர்.செந்தில் -- எனக்குத் தெரியாதவர்கள்..

//RVS said..."ஸ்ரீராமனை லிஸ்ட்ல ஃபர்ஸ்டா சொல்லியிருப்பது அருமை! ;-)) " //

Yes, RVS..
அவன் ஓபன் டைப்... தப்புனா தப்புன்னு சொல்லுற ரகம்.. சரியான விஷயத்திற்கு எந்த ரிஸ்க் வேணாலும் எடுத்து செய்யக் கூடியவன். அவனது திறமைகளை அவன் தனக்கு, சரியாகப் பயன் படுத்தவில்லையோ என்பது எனது டவுட்டு.

Madhavan Srinivasagopalan said...

//ஸ்ரீராம். said... "..நட்புக்கு மரியாதை செய்திருக்கிறீர்கள்..." //

ஓஹோ ! அது நீங்கதானா ? (சும்மா..)

Unknown said...

உங்கள் கர்வம் பார்த்து பொறாமை வருது நண்பா ...நான் தொலைத்து வந்த நட்புகள் அனைத்தும் மீண்டும் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கம் தோற்றி கொண்டது ..அருமையான பதிவு ...நன்றி நன்றி ...

A.R.ராஜகோபாலன் said...

@ரஹீம் கஸாலி

நன்றி உங்களின் நம்பிக்கைக்கு
கருத்திற்கு

MANO நாஞ்சில் மனோ said...

வாழ்த்துக்கள் மக்கா வாழ்த்துக்கள்....

A.R.ராஜகோபாலன் said...

@Madhavan Srinivasagopalan
உண்மை மாதவன்
ஸ்ரீராம் ஒரு புத்திசாலியான
வளர்ந்த குழந்தை

A.R.ராஜகோபாலன் said...

@வெங்கட் நாகராஜ்
நன்றி உங்களின் கருத்துப் பகிர்விற்கு
என் அன்பரே நீங்களும் இதை தொடரலாமே
தொடருங்களேன் ......... Pls

A.R.ராஜகோபாலன் said...

@MANO நாஞ்சில் மனோ
நன்றி அண்ணாச்சி
நீங்க ரொம்ப நாளா வரவேயில்லை

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
அது என் நட்புலக கர்வம்
ஆனால் நீங்கள் என் பதிவுலக கர்வம் அல்லவா நண்பா
நன்றி கர்வத்தை கருத்திட்டதற்கு

Unknown said...

உங்கள் நட்பால் மட்டுமே நானும் நல்லா தான் எழுதுறேன் போலிருக்கு என்று தோணுது ...ஆனால் காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்ற பழமொழியும் ஞாபகம் வருது ஹி ஹி

A.R.ராஜகோபாலன் said...

@ரியாஸ் அஹமது
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பது பழைய மொழி , புலிக்கும் தன் குட்டி புலிக் குட்டி என்பது என் மொழி

ADHI VENKAT said...

நல்ல பகிர்வு. நண்பர்கள் அனைவரிடமும் இன்று வரை தொடர்புடன் இருப்பது குறித்து மகிழ்ச்சி.

சுதா SJ said...

வணக்கம் பாஸ்
அசத்தலான நட்புக்கு மரியாதை செய்யும் பதிவு.
நீண்ட நாட்களின் பின் உங்கள் வலைப்பக்கம் வருவதற்கு மன்னிக்கவும் ,
என் ப்ளோகில் சிறு பிரச்சனை அதுதான் இவ்ளோ நாளா உங்களுக்கு கருத்துரை இடமுடியாமல் இருந்தது
இப்போது எல்லாம் சரி ஆகிவிட்டது
இனி தொடர்ந்து வருவேன் கருத்துரை இடுவேன் பாஸ்

A.R.ராஜகோபாலன் said...

@கோவை2தில்லி
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@"கற்றது தமிழ்" துஷ்யந்தன்
நட்பை அங்கீகரித்த உங்களுக்கு என் நட்பான நன்றி

நிரூபன் said...

உண்மையான நண்பர்கள் & பிரதியுபகாரம் கருதாது பழகும் நண்பர்கள் எப்படி இருக்க வேண்டும்,
நட்பிற்கு அடையாளமாய் எத்த்கைய பண்புகள் இருக்க வேண்டும் என்பதனை தத்துவச் சுருக்கமாக உங்கள் பதிவினூடாக எங்களோடு பகிர்ந்திருக்கிறீர்கள்,
கூடவே உங்கள் இளமைக்கால நினைவுகளையும் மீட்டிப் பகிர்ந்திருக்கிறீங்க.

ரசித்தேன்.

அம்பாளடியாள் said...

உறவினர்களை நாம் மறந்தாலும் நல்ல நண்பர்களை என்றுமே எம்மால் மறக்க முடியாது.வாழ்த்துக்கள் அருமையான படைப்பைத் தொடரும் உங்களுக்கு.

A.R.ராஜகோபாலன் said...

@நிரூபன்
நன்றி சகோ
உங்களின் வித்யாசமான பார்வையில்
கருத்தை பதிவிட்டதற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

@அம்பாளடியாள்
தரிசனத்திற்கு நன்றி
உங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி
சகோதரி

வெங்கட் நாகராஜ் said...

உங்கள் அழைப்பின் படி, இன்று என் வலைப்பூவில் நானும் தொடர்ந்திருக்கிறேன்...

http://venkatnagaraj.blogspot.com/2011/07/blog-post.html

இது உங்கள் தகவலுக்காக.....