Friday 2 December 2011

உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா?


                                                  அரசியலில் ராஜ தந்திரம் என்பது இன்றியமையாத ஒன்று, அந்த குணத்தை வைத்தே அரசியலில் வெற்றி தோல்விகள் முடிவு செய்யப்படுகின்றன. தமிழகத்தை பொறுத்தவரையில் இரு பெரும் கட்சிகளான அதிமுக வும் திமுக வும் இருந்து வருகின்றன, அதிமுக செல்வி.ஜெயலலிதாவின் தலைமையிலும், திமுக திரு.கருணாநிதியின் தலைமையிலும் செயல்பட்டு வருகிறது. கடந்த 20வருடங்களில் நான் கவனித்து வந்த அரசியலில் இவ்விருவருமே தமிழகத்தை தங்களின் ஆளுமையால் கட்டுபடுத்தி வருகின்றார்கள், இவ்விருவரையும் நான் கவனித்தவரையில் யார் சிறந்த ராஜதந்திரி அல்லது அரசியல் சாணக்கியர் என்று என் அரசியல் ஞானத்தை வைத்து அலசப்பட்டுள்ள அரசியல் பதிவு, இது தமிழகம் சார்ந்த, அவர்களின் அரசியல் சார்ந்த முடிவுகளின் அடிப்படையில் அலசப்பட்டுள்ளது.



 கலைஞர் கருணாநிதி: 1991 - 1996
  • 1991 தேர்தலில் ஏற்பட்ட படுதோல்விக்கு பிறகும், 1993 ல் திமுக உடைந்து மதிமுக உருவான பின்னும் கட்சியை கட்டுப்பாட்டுடன் வைத்திருந்து மீண்டும் அபார வெற்றி பெற்றது அவரின் தன்னிகரில்லாத தலைமைக்கு அபாரமான எடுத்துக்காட்டு.
  •  தனித்தே நின்றிருந்தாலும் ஜெயலலிதாவின் மீதிருந்த வெறுப்பினால் வெற்றி பெறக்கூடிய சூழ்னிலை இருந்தும், புதிதாக உதயமான த மா கா விற்க்கு 40 சட்ட மன்ற தொகுதிகளை கொடுத்து கூட்டணிக் கட்சிகளை அரவணைத்து போனது நல்ல ஒரு முன்னுதாரணம்.
செல்வி.ஜெயலலிதா 1991 - 1996

  • 1991 தேர்தலில் பெற்ற அபரிதமான வெற்றியை தன் அரசியல் அனுபவமின்மையால், தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனது.
  • 1991 பெற்ற வெற்றி தன்னால் பெற்ற வெற்றி என்று வீர வசனம் பேசிவிட்டு மீண்டும் காங்கிரஸுடன் கூட்டணிக்காக காத்து கிடந்தது. 
கலைஞர் கருணாநிதி:  1996 -2001


  • ஜெயலலிதாவின் மீதுள்ள வெறுப்பால் பெற்ற வெற்றிக்கு த ம கா விற்கும்  பங்கு கொடுத்தது .
  • 1996 ல் நடை பெற்ற உள்ளாட்சி தேர்தலில் அ தி மு க தனக்கு ஏற்பட்ட தோல்வியிலிருந்து எழுந்திராத நிலையிலும், த மா கா அவசியம் இல்லாத போதிலும் நகராட்சி தலைவர் பதவிகளையும் , மேயர் பதவிகளையும் வாரி வழங்கியது.
  • 1998 மக்களவை தேர்தலில் 2 இடங்கள் கேட்ட பா ம க வை உதறி பிரயோஜனமே இல்லாத த மா கா விற்கு மீண்டும் 20 மக்களவை இடங்களைக் கொடுத்தது. அந்த தேர்தலில் தோல்வி அடைந்து அ தி மு க விற்கு புத்துணர்சி தந்தது.
  • 1999 தேர்தலில் ஜெயலலிதா பாணியிலேயே கூட்டணி அமைத்து தன் தனித் தன்மையை இழந்தது.
  • 2001 ல், பயனில்லாத பா ஜ கா வுடன் கூட்டணி அமைத்து மீண்டும் த மா கா, பா ம க கம்யூனிஸ்டு, ம தி மு க வுடன் கூட்டணி அமைக்க முடியாமல்  நல்லாட்சி தந்திருந்தும் தேர்தலில் தோற்றது.
செல்வி.ஜெயலலிதா 1996 - 2001
  • 1996 ல் கிடைத்த படுதோல்விக்கு பிறகு தனி ஒரு நபராக கட்சியை தூக்கி நிறுத்தியது
  • 1998 ல் யாரும் எதிர்பாராத விதமாக ஜம்போ கூட்டணி அமைத்து மீண்டும் வெற்றி வெளிச்சத்தில் வலம் வர தொடங்கியது.
  • 1999 ல் பலமான கூட்டணி இல்லாமலேயே சாதகமான வெற்றியைப் பெற்றது.
  • 2001 ல் தன்னை எதிர்த்து தொடங்கப் பட்ட த மா காவையே தன் கூட்டணிக்குள் அழைத்து மறுமுறையும் பலமான கூட்டணி அமைத்து 1996 ல் இழந்த வெற்றியை மீண்டும் பெற்றது. 

கலைஞர் கருணாநிதி:  2001-2006
  • 2001 ல் தன்னை கைது செய்த சம்பவத்தை சாதகமாக பயன்படுத்தி அதில் வெற்றி பெற்றது.
  • 2004 ல் மீண்டும் ஜெயலலிதாவின் பாணி கூட்டணி அமைத்து அபார வெற்றி பெற்று மத்திய அரசில் முக்கிய பங்கு வகித்தது .

செல்வி.ஜெயலலிதா 2001- 2006

  • ஆட்சிக்கு வந்ததும் கருணாநிதியை தவறான அணுகுமுறையில் கைது செய்தது.
  • அரசு அலுவலர்களை சாட்டையால் வேலைவாங்குவேன் என தைரியமாக சொன்னது
  • மதரீதியிலான சில வேண்டாத முடிவுகளை எடுத்தது
  • தன்னை எதிர்த்து அரசியல் செய்த வை கோ வை 2006 தேர்தலில் தன் அணிக்கு வரவழைத்து, பலமில்லாத கூட்டணியாக இருந்தும் குறிப்பிட்டு சொல்லும் படியான வெற்றியை பெற்றது.

கலைஞர் கருணாநிதி:  2006 - 2011

  • பலமான கூட்டணி அமைத்தும், வெற்றி பெறக்கூடிய தொகுதிகளை தேர்வு செய்யாமல் பெரும்பான்மை பெற முடியாமல் போனது
  • கடும் மின்வெட்டுக்கு வழி வகுத்தது
  • மீண்டும் காங்கிரஸுக்கு உள்ளாட்சி தேர்தலில் அதிக இடங்களை கொடுத்து மேயர் பதவியையும், நகராட்சி தலைவர் பதவிகளையும் வாரி வழங்கியது
  • மீண்டும் ஜெயலலிதாவை பழிக்கு பழியாக கைது செய்யாமல், பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டியது.
  • மீண்டும்,மீண்டும் ஒரே மாதிரியான அமைச்சரவைகளை அமைத்தது.
  • பலமே இல்லாத காங்கிரஸ் கட்சியை 2009 தேர்தலிலும் தூக்கி சுமந்தது
  • இலங்கை தமிழருக்கு ஆதரவு தராதது
  • 2011 தேர்தலில் கட்சியையும் மக்களையும் மறந்து குடும்பத்திற்காக காங்கிரஸிடம் கேவலப்பட்டு ஆட்சியை இழந்தது.

செல்வி.ஜெயலலிதா 2006 - 2011

  • ஒரு பொறுப்புள்ள எதிர் கட்சி தலைவராக செயல்படாவிடாலும், திடீர் திடீரென சட்டசபையில் கலந்து கலக்கியது
  • இலங்கை தமிழர் பிரச்சனையை தனக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொண்டது
  • கடைசி 18 மாதங்களில், கட்சியை அசுர வேகத்தில் பலப்படுத்தியது
  • திறனான கூட்டணி அமைத்து, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்தெடுத்து பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
கலைஞர் கருணாநிதி:  2011 

  • பொறுப்புள்ள கட்சியின் தலைவர் என்பதை மறந்து, ஒரு குடும்பத்துக்கு மட்டும் தலைவராக இருப்பது

செல்வி.ஜெயலலிதா : 2011

  • சட்ட மன்ற தேர்தலில் வெற்றி பெற்றதும் அனைத்து கட்சிகளையும் தள்ளிவைத்து உள்ளாட்சி பதவிகளை பங்கு போடாமல் தன் கட்சி தொண்டர்களுக்கே பதவிகளை வாரி வழங்கியது.
  • இன்னும் இரண்டரை ஆண்டுகளுக்கு தேர்தல் கவலை இல்லை என்ற தெம்பில் பால், பேருந்து கட்டணங்களை உயர்த்தியது.

அவர்களின் குண நலன்களை இங்கே எனக்கு தெரிந்தவரையில் பட்டியலிட்டு இருக்கிறேன், இனி யார் சிறந்த அரசியல் ராஜ தந்திரி என்பது உங்களின் கைகளில் , முடிவில்.

அன்பன்
ARR

 

14 comments:

K.s.s.Rajh said...

நல்லதொரு ஆய்வு பதிவு பாஸ்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதோர் அலசல்...

அமைதி அப்பா said...

'எல்லாத்தையும் சொல்லிட்டு முடிவு உங்கள் கையில்'னு உங்க ராஜ தந்திரத்தைக் காட்டிட்டீங்களே...?!

ஷர்புதீன் said...

//சுயம் இழக்காதிர்கள்//

correcta?!!

நிரூபன் said...

வணக்கம் அண்ணா,

தேர்தல் ஆண்டுகளின் அடிப்படையில் தொகுதி வாரியாக குணவியல்புகளை அலசியிருக்கிறீங்க.

என்னைப் பொறுத்த வரை நீங்கள் இங்கே பகிர்ந்த தகவல்களின் அடிப்படையில் ஜெயாவிற்குத் தான் வருங் காலத்திலும் கலைஞரை விடக் கொஞ்சம் அதிகமான வாய்ப்புக்கள் கிடைக்கும் என நினைக்கிறேன்.

Madhavan Srinivasagopalan said...

// மீண்டும் ஜெயலலிதாவை பழிக்கு பழியாக கைது செய்யாமல், பழிவாங்கும் அரசியலுக்கு முடிவு கட்டியது. //


இந்த வரிகளை நீங்கள் தவித்திருக்கலாம்..
ஏனென்றால்.. பொய் வழக்குகள் கூட தனக்கெதிராக போட முடியாத வகையில் நிர்வாகம் (2001 =2006)ல் இருந்தது என்பது உண்மைதானே..

Unknown said...

7th vote ....
good post bro...
politics good analysis

tq for your loving,caring and invaluable wish....tq very very much

சென்னை பித்தன் said...

ராஜ தந்திரி கோப்லிதான்!அவர் முடிவைச் சொல்லாமல் மழுப்பி விட்டாரே!
த.ம.8

Unknown said...

வழக்கம் போல அனைத்தையும்
அலசி ஆய்வு செய்து எழுதி யுள்ளீர்
யார் இராஜ தந்திரி என்பதை
எதிர் காலம் கா்ட்டும்!

புலவர் சா இராமாநுசம்

Admin said...

அலசி ஆராய்ந்து விட்டீர்கள்.காலம் தான் பதிலை சொல்லவேண்டும்..

ஸ்ரீராம். said...

No comments!!!

ரசிகன் said...

என்னங்க, உண்மையான ராஜதந்திரி கருணாநிதியா? ஜெயலலிதாவா? ன்னு சொல்லப் போறீங்கன்னு பாத்தா எங்களையே முடிவு பண்ணிக்க சொல்லிட்டீங்க!

நல்ல அலசல்.

அப்பாதுரை said...

interesting..
ராஜதந்திரம்னு சொன்னீங்க? அதைப் பத்தி இன்னும் எழுதியிருக்கலாமே?
கருணாநிதியின் அரசியல் சாகசம் தந்திரம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் 65-71 காலக்கட்டத்துக்குப் போக வேண்டும். அண்ணாதுரையின் ஆதரவுகளை சாமர்த்தியமாக கையாண்டு, எம்ஜிஆர் எனும் சக்தியை வளர்த்து ஒடுக்கி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தியதும், அன்பழகன் நெடுஞ்செழியன் போன்றவர்களைப் பின்னுக்குத் தள்ளியதும் தந்திரம்; இந்திரா காந்தியை வாய்க்கு வந்தபடி ஏசி பின்னர் 'உரிமைக்குக் குரல் கொடுப்போம், உறவுக்குக் கை கொடுப்போம்' என்று சாமர்த்தியமாக வளைந்து கொடுத்துப் போனது அரசியல். வாக்குச்சீட்டுக்கான இலவசங்கள் தந்திரம். முகமுத்து தந்திரம் (தோல்வியடைந்தாலும்).
ஜெயலலிதா சமீபத் தேர்தல் வரை எம்ஜிஆர் நிழலையே பயன்படுத்தி வந்ததாக நினைக்கிறேன். இதுவரை அவரது அரசியல் நடவடிக்கைகளில் (சமீப தேர்தல் தவிர) தந்திரமோ அரசியலோ தென்பட்டதாகத் தெரியவில்லை. பெண் எனும் மிகப்பெரிய அரசியல் தந்திர சாதனத்தை அவர் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன். சோ போன்ற உதவாக்கரை அரசியல் ஆலோசகர்களை வைத்திருப்பதும் ஜெவின் அரசியல் தொலைநோக்கைக் கேள்விக்குறியாக்குகிறது (ஏறக்குறைய ரஜனிகாந்தின் அரசியல் ஸ்டைல் என்றே சொல்வேன், இருந்தாலும் ஜெயை எனக்குப் பிடிக்கும் என்பதால் அந்த அளவுக்கு மட்டம் தட்ட விரும்பவில்லை :). பெண் எனும் அரசியல் தந்திர சாதனத்தைக் கருணாநிதி நன்றாகவே புரிந்து வைத்திருக்கிறார் என்பதை கனிமொழியின் அடுத்தக் கட்ட வளர்ச்சி எடுத்துக் காட்டலாம். கருணாநிதி சுயநலத்தைத் தவிர்த்து நடக்க முடிந்தால்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 11 இண்ட்லி 8

நல்லதொரு அலசல்.
பாராட்டுக்கள்.

vgk