Wednesday, 30 November 2011

ஸ்டாலின் / அழகிரி ஒரு ஒப்பீடு          இந்த தலைப்பே இது ஒரு அரசியல் சார்ந்த பதிவு என்பதை சொல்லிவிடும், கடந்த தேர்தல்களில் தோல்விகளால் துவண்டு போயிருக்கும் தி மு கழகத்தில் இது மாதிரியான ஒரு ஒப்பீடு தேவையா என்று பார்த்தோமேயானால், ஆம் இப்போது தான் தேவை, ஏனெனில் தோல்விகளின் போதும், அதை எதிர் கொள்கிற போதும் தான் ஒரு தலைவனின் தகுதி தெரியும், அதைப் போலவே ஒரு நல்ல தலைவனால் தான் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, தோல்விகளைக்கூட பயன் படுத்திக்கொள்ள முடியும்.


                        தன்னுடைய தமிழால், திறமையால், எழுத்தால், பேச்சால் பிரளயம் போல அரசியல் வானை பிளந்துகொண்டு வந்த மு.கருணாநிதியின், புத்திரர்களாக இருந்தாலும் இந்த இருவருக்குமே அவரைப் போல திறமை கிடையாது என்பதே முழு உண்மை. தனக்கென தானே தனி ராஜபாட்டை அமைத்து கொண்ட அவருக்கும், ராஜபாட்டை அமைத்து தந்தும் அதில் தன் முழு ஆதிக்கத்தை செலுத்த முடியாத இவர்களுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.


            சரி இப்போது தி மு கழகத்திலே அடுத்த தலைவர் யார் என்ற போட்டியும், தொண்டர்கள் பலம் பெற்றவர் யார் என்ற போட்டியும் தி மு க வின் ஒவ்வொறு மட்டத்திலும் விவாதிக்க பட்டு வருகின்றது.


அடுத்து யார்? ஸ்டாலினா? அழகிரியா??.     


இதற்கான பதிலை சொல்ல நான் அரசியல் ஜோதிடன் இல்லை ஆனால் அரசியலை உற்று நோக்கும் ஒரு சராசரி மனிதனாய் என் பார்வையில் இருவருக்குமிடையேயான ஒப்பீட்டு அளவிலான செய்திகளை இங்கே பார்ப்போம்.


முதலில் அழகிரி......... 
தென் மண்டல செயலாளரும், மத்திய அமைச்சரும் அவரின் தொண்டர்களால் அஞ்சா நெஞ்சன் என்று அழைக்க படும் அழகிரியின் செயல் பாடுகள் பெரும்பாலும் உணர்ச்சிகளின் வழியே நடத்தப் படுவதாகவே உணர்கிறேன். அதன் காரணங்கள் • எந்த ஒரு பொதுவான கட்சி நிகழ்வுகளிலும் தன்னை முன்னிலை படுத்தவிடில் அந்த நிகழ்சியை புறக்கணிக்க போவதாக செய்திகளை அவரின் தொண்டர்களின் மூலமாக பரப்புவது
 • 2001 தேர்தலில் தன் ஆதரவாளர்களுக்கு போட்டியிட வாய்ப்பு தர வில்லை என்ற காரணத்திற்காக ஒரு நகர செயலாளரைப் போல தன் கட்சிக்கு எதிராகவே போட்டி வேட்பாளர்களை நிறுத்தி தி மு க வின் தோல்விக்கு காரணமாக இருந்தது.
 • தனக்கென ஒரு கூட்டத்தை சேர்த்து அவர்களின் கொட்டத்தை அடக்காமலிருந்தது.
 • தன்னை புகழ்பவர்கள் தன் குடும்பத்தாரையும் முன்னிலைப் படுத்த வேண்டும் என் நினைத்தது
 • விமர்சனங்களை தாங்கமுடியாமல், விமர்சித்தவர்களின் மீது வன்முறையை கட்டவிழ்த்து விடுவது.
 • தகுதியே இல்லாதவராக இருப்பினும் தன்னை புகழ்ந்தால் அவர்களுக்கு பதவிகளை வாரி வழங்குவது
 • எந்த கட்டுபாடும் இல்லாமல் கட்சியின் எதிர் காலத்தை நினைக்காமல் தன் விருபத்திற்கு ஏற்றார் போல செயல் படுவது.
 • ஆட்சியில் இருந்த போது தென் மாவட்டங்களின் ஒரே பிரதி நிதியாக செயல்பட்டு , கடந்த உள்ளாட்சி தேர்தலில், தன் சொந்த தொகுதியில் கூட பிரச்சாரம் செய்யாமல் இருந்தது 
 • மத்திய அமைச்சராக ஒரு பொறுப்பான பதவியில் இருந்துகொண்டு, பெரும்பாலான நாட்களில் நாடாளுமன்றத்திற்கு செல்லாமலும், துறை சம்பந்தமான கூட்டங்களில் கலந்து கொள்ளாமலும் இருப்பது.
 • ஸ்டாலின் எப்போது மதுரை வந்தாலும் குறுகிய மனப்பான்மையுடன் அவரை யாரும் வரவேற்க்க செல்லக்கூடாது என தடை விதித்து கட்சியில் பிரிவு வருவதற்கு காரணமாக இருப்பது. 
 • எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தாற் போல, சென்ற ஆட்சியில் அஞ்சாநெஞ்சனாக வலம் வந்து, இந்த அ தி மு க ஆட்சியில் சத்தமே இல்லாமல் தில்லியிலேயே இருப்பது.

இனி ஸ்டாலின்

இவரின் கடந்த கால, அதாவது 1989க்கு முன் செயல் பாடுகள் பல விமர்சனங்களுக்கு ஆளானாலும், இவரின் கடந்த 15 ஆண்டு அரசியல் செயல்பாடுகள் ஒரு பக்குவப்பட்ட அரசியல்வாதியை இவரின் உள்ளே காணமுடிகிறது.அதற்கான காரணங்களாக நான் கருதுவது

 • தோல்வியோ வெற்றியோ தன் அரசியல் பயணத்தில் கிஞ்சித்தும் தளர்வு வராமல் தொடர்ந்து செயலாற்றிக்கொண்டு இருப்பது
 • இது வரை அவருக்கு அளிக்க பட்ட கட்சி பதவிகள் அனைத்தையும் குறையின்றி செயல் படுத்தியது.
 • எந்த ஒரு ஆட்சிப் பணிக்கும் மக்களின் மூலமாகவே ஜனநாயகத்தின் வழியே தன்னை தேர்வு செய்ய வைத்தது.
 • 2001ஆம் ஆண்டில் சென்னை மேயரா? அல்லது சட்ட மன்ற உறுப்பினரா என்ற கேள்விக்கு எதிர்கட்சி வரிசையில் இருந்தாலும், முக்கிய பதவியில் இல்லை என்றாலும் சட்ட மன்ற உறுப்பினராகவே தொடர்ந்தது.  
 • தன்னை சுற்றி இருப்பவர்கள் தொடர்ந்து தவறு செய்வதாக அறிந்தால் அவர்களை தன்னிடமிருந்து விலக்கி வைப்பது.
 • விமர்சனங்களை துவளாமல் எதிர்கொள்வது
 • கட்சியின் வெற்றிக்காக தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக பிரச்சாரத்தில் ஈடுபடுவது
 • கட்சிக்கு கடந்த காலங்களில் எந்த சங்கடங்களையும் ஏற்படுத்தாதிருப்பது
 • மக்களிடம் நல்ல அபிமானத்தை பெற்றிருப்பது
 • அரசியல் கடந்து முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது
 • ஒரு நல்ல தலைவனாக தன்னை நிலை நிறுத்த முயற்சிப்பது.
 • கூட்டணிக் கட்சி தலைவர்களை அரவணைத்து செல்வது
 • கட்சி தலைவரின் மகன் என்பதையும் தாண்டி தனக்கென ஒரு நிலையை அடைந்திருப்பது
 • தன் தகுதிக்குட்பட்ட பதவிகளைப் பெறுவது
 • தலைவனுக்குரிய போராட்ட குணம்
 • கட்சியில் பெரும்பாலான தொண்டர்களால் விரும்பப்படுவது.

       இப்படி பல ஒப்பீடுகளின் அடிப்படையில் என்னை பொறுத்த மட்டில் ஸ்டாலினே முன்னிலையில் இருக்கிறார், இந்நிலை, என்னிலை மட்டுமே, தொண்டர்களின் நிலை நானறியேன். இப்பதிவில் உங்களுக்கு மாறுபட்ட அல்லது வேறுபட்ட கருத்திருந்தால் அதை பின்னூட்டங்களில் தெரிவிக்க வேண்டுகிறேன்.

அன்பன்
ARR

34 comments:

Mathuran said...

நல்ல ஒப்பீடுதான்

A.R.ராஜகோபாலன் said...

@மதுரன்
இத்தனை விரைவான கருத்திற்கு மிக்க நன்றி நண்பரே

முத்தரசு said...

கருத்து, கணிப்பு அசத்தல் - நல்ல சொன்னேள் போங்கோ

முத்தரசு said...

எல்லாம் சர்தான் அது என்ன ஒய் நம்ம கனிய விட்டுபுட்டியலே

முத்தரசு said...

கனி இல்லா தி மு க வா கற்பனைக்கும் எட்டா கனி

A.R.ராஜகோபாலன் said...

@ மனசாட்சி
முத்தான மூன்று கருத்துக்களுக்கு நன்றி நண்பரே

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
நல்லா இருக்கீங்களா?

அருமையான இப்பீட்டு அலசல்.
உங்கள் பார்வையின் அடிப்படையில் ஸ்டாலின் தான் மக்கள் பணி, மனித நேயத்துடன் பழகும் விதம், கட்சி பேதமின்றி அம்மையாரைச் சந்தித்த செயல் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு உயர்ந்த இடத்தில் இருக்கிறார்.

காலம் என்ன பதில் சொல்லுகிறது என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

A.R.ராஜகோபாலன் said...

@நிருபன்

நலம் நாடுவது நலம் சகோ
உண்மை, இது என் கருத்துதான்
நன்றி தங்களின் கருத்திற்க்கு, வருகைக்கு

நெல்லி. மூர்த்தி said...

அரசியலை உற்று நோக்கும் சாதாரண மக்களுக்கு மட்டுமல்ல, விமர்சகர்களும் தாங்கள் கூறியதையே தான் முன் நிறுத்துவர். கனகச்சிதம்!

அம்மா ஆட்சி என்பதால் அஞ்சாநெஞ்சனிடமிருந்து ஆட்டோ தாக்குதலோ, பெட்ரோல் பாமோ பரிசாக வராது என்பது ஆறுதலளிக்கக் கூடிய விஷயம்.

இறுதியாக ஆளுங்கட்சியிலிருப்பவர்களாகட்டும் எதிர்கட்சியிலிருப்பவர்களாகட்டும்.. ஒரு சிலர், தலைவர்களாக இருப்பவர்களாகட்டும் மற்றும் தங்களை தலைவர்களாக இருத்திக்கொள்பவர்களாகட்டும், தத்தமது தவறுகளிலிருந்து திருத்திக் கொள்ள முயல்வதாக தெரியவில்லை. இது அம்மா ‘ஜெ’வாக இருக்கட்டும் அண்னன் ‘அழகிரி’யாகட்டும் இருவருக்கும் பொருந்தும்.

A.R.ராஜகோபாலன் said...

@ நெல்லி. மூர்த்தி
அமர்க்களமான கருத்திற்கு நன்றி நண்பரே

Unknown said...

சமன் செய்து சீர்தூக்கும் கோல்
போல் நன்கு ஆய்ந்து எழுதிய
பதிவு!
அருமை! சகோ!

புலவர் சா இராமாநுசம்

rajamelaiyur said...

நல்ல அலசல்

rajamelaiyur said...

இன்று ..

பல்சுவை வலைதளம் விருது

ஸ்ரீராம். said...

ஒத்துக் கொள்ள வைக்கும் ஒப்பீடு. ஜெ யைச் சந்தித்த அவர் நாகரீகம் என்னையும் கவர்ந்த விஷயம்.

ரஹீம் கஸ்ஸாலி said...

arumaiyaana oppeedu. Alagiriyai vida stalinukke thalamaikkaana thakuthi athikam

சென்னை பித்தன் said...

அருமையான ஒப்பீடு.
த.ம.7

துரைடேனியல் said...

Nalla oppeedu. Arumai.
TM 8.

A.R.ராஜகோபாலன் said...

@ புலவர் சா இராமாநுசம்

நல்ல கருத்துக்கு மிக்க நன்றி அய்யா...

A.R.ராஜகோபாலன் said...

@ "என் ராஜபாட்டை"- ராஜா
நன்றி நண்பரே........

A.R.ராஜகோபாலன் said...

@ ஸ்ரீராம்.
தங்களின் தொடர் வருகைக்கும், கருத்திற்கும் நன்றி அன்பரே

A.R.ராஜகோபாலன் said...

@ ரஹீம் கஸாலி
மிக்க நன்றி நண்பரே
மனம் மகிழ்ந்தேன்

A.R.ராஜகோபாலன் said...

@ சென்னை பித்தன்
நன்றி அய்யா

A.R.ராஜகோபாலன் said...

@ துரைடேனியல்
தங்களின்
முதல் வருகைக்கும்
முத்தான கருத்திற்கும்
முழு நன்றி நண்பரே

Unknown said...

ஸ்டாலின் vs அழகிரி பற்றிய,அரசியலறிந்தோர் பெரும்பான்மையினரின் கருத்தாகவே இப்பதிவு அமைந்துள்ளது.உண்மையும் கூட.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல ஒப்பீடு நண்பரே....

Yaathoramani.blogspot.com said...

பாரபட்சமற்ற சரியான ஒப்பீடு
வாழ்த்துக்கள் த.ம 11

வர்மா said...

ஸ்ராலினை வளர்த்தது அரசியல்.

G.M Balasubramaniam said...

திமுக வில் இவர்கள் இருவரைத் தவிர வேறு தலைவர்களே இல்லையா. நெடுஞ்செழியன் ,அன்பழகன் போன்றோரை பின்னுக்குத் தள்ளிமுதலிடம் பிடித்தார் கருணாநிதி. அதே போல் இவர்களை முந்தும் எதிர்பாரா குதிரையும் எங்காவது இருக்கும்.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல அலசல். பகிர்விற்கு நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"மாயா... மாயா... எல்லாம்... சாயா... சாயா..."

Madhavan Srinivasagopalan said...

Present Sir.

PUTHIYATHENRAL said...

தமிழகத்தை தாக்கும் சுனாமி! தமிழக மக்களே! சிந்தியுங்கள்! மீண்டும் ஒரு சுதந்திர போராட்டத்திற்கு தயாராகுங்கள்! மக்களின் நலனில் அக்கறையில்லாத வட இந்திய ஹிந்தி அரசு முல்லை பெரியாறு அணை முதல் கூடங்குளம், தமிழக மீனவர் பிரச்சனை, காவேரி பிரச்சனை, ஹிந்தி மொழி திணிப்பு, என்று தமிழகத்தை தொடர்ந்து குறிவைத்து தாக்கும் சுனாமியாக திகழ்ந்து வருகிறது. தமிழக மக்கள் அடைந்த துன்பம் போதும். சிந்திப்பீர்! செயல்படுவீர்!. please go to visit this link. thank you.

தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!தமிழினத்தின் வீரமங்கை செங்கொடியின் நினைவிடத்திலே தமிழர் துரோக பத்திரிக்கையான தினமலருக்கு என்ன வேலை. அந்த விழாவின் நோக்கத்தை கொச்சைபடுத்தி செய்தி வெளியிடவா? அல்லது உனது விற்காத பத்தரிக்கைக்கு செங்கொடியின் செய்தியை போட்டு விளம்பரம் தேடவா? please go to visit this link. thank you.

இந்தியா உடையும்! ஆனா உடையாது!இந்தியா ஏன் உடைய வேண்டும்? உங்களுக்கு ஏன் இந்த கெடுமதி! என்று எண்ணத் தோன்றுகிறதா? அதற்க்கு நிறைய காரணங்கள் உண்டு. ஒன்று ஈழத்து பிரச்சனை, தமிழக மீனவர்கள் பிரச்சனை, காஷ்மீர் பிரச்சனை, சத்தீஸ்கர் பழங்குடி மக்களின் மீது நடத்தப்படும் தாக்குதல், போபால் விசவாய்வு, பாபர் மசூதி இடிப்பு, குஜராத் இனப்படுகொலை. இவை மட்டுமே போதும் இந்தியா உடைவதற்கு தேவையான காரணிகளில் மிக முக்கியமானவை.
please go to visit this link. thank you.

ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?ஈழத்தமிழர் போராட்டத்தையும், தமிழர்களின் போராட்டங்களையும் தேசவிரோதமாக, பயங்கரவாதமாக சித்தரித்து எழுதிவந்தது தினமலர். please go to visit this link. thank you

கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!ஈழத்து போராளிகளை கொன்று குவித்து, தமிழ் பெண்களின் கற்ப்பை சூறையாடி, சமாதான கொடி ஏந்தி வந்தவர்களையும் பொதுமக்களையும் கூண்டோடு கொலை செய்த கயவர்களை கொல்பவர்கள் யாரோ அவரே எங்களுக்கு மாகாத்மா please go to visit this link. thank you.

போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!நாம் கொண்டிரிருக்கும் மூடத்தனமான போலி தேசபக்தியின் விளைவு ஈழத்திலே இரண்டு இலச்சத்திற்கும் அதிகமான தமிழர்கள் கொல்லப்பட காரணமாக் அமைந்து விட்டது. please go to visit this link. thank you.

முனைவர் இரா.குணசீலன் said...

:)

ரசிகன் said...

நீங்கள் எப்போதும் போல தைரியமாகவே இருக்கலாம். ஆயுத எழுத்து தினகரனுமல்ல, இப்போது தி.மு.க ஆட்சியுமல்ல.

நடுநிலையான ஒப்பீடு.

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழ்மணம் 12 இண்ட்லி 7

நல்லதொரு ஒப்பீடு.
பாராட்டுக்கள்.

அரசியலில் கருத்துச் சொல்ல பொதுவாக எனக்கு விருப்பம் இல்லை.
அதனால் தான் சற்றே ஒதுங்கி இருந்தேன்.

vgk