Saturday, 3 December 2011

கனிமொழிக்கு கட்சி பதவி தேவையா? அவசியமா?

                             

  நேற்று நீண்ட நாட்களாக சிறையில் இருந்த திருமதி.கனிமொழி சென்னை வந்தார், தி மு க வின் அனைத்து மட்ட தலைவர்களும் விமான நிலையத்திலும் , அவரது வீட்டிலும் திரண்டிருந்து வரவேற்று வாழ்த்து தெரிவித்தனர்.அவரை வரவேற்று விமான நிலையத்திலிருந்து அவரின் வீடு வரை ஒரே போஸ்டர் மயம், அதில் கண்டுள்ள வாசகங்கள் அவரின் சிறை வாழ்க்கை வ.உ.சி யையே பின்னுக்கு தள்ளியது.

 

                                    சரி இப்போது , நம் பதிவு எதை பற்றியது கனிமொழிக்கு பதவி கொடுப்பது அவசியமா? என்பதுதான். மாறன் சகோதரர்களுடன் பிரச்சனை ஏற்பட்ட பின்புதான் கனி மொழிக்கு அதிகாரபூர்வ அங்கிகாரம் கொடுக்கப்பட்டது, தில்லியில் நம்பிக்கைக்கு உரிய நபராக இவர் வலம் வர மாநிலங்களவை உறுப்பினராகவும் தேர்வு செய்யப்பட்டார். இதன் பிறகே கட்சியில் இவரின் முக்கியத்துவம் படிப் படியாக அதிகமானது. முன்னாள் அமைச்சர் ராசா தொலை தொடர்பு அமைச்சராக இவரது ஆதரவும் முக்கியமானதாக சொல்லப்பட்டது, இதனாலேயே இவருக்கும் மாறன் சகோதரர்களுக்கும் பிரச்சனை ஆனது. 

                                        நான் முன்பே என்னுடைய மற்றொரு பதிவில் சொன்னபடி

(கனிமொழி சிறையில்.... கலைஞர் கண்ணீர்....)

இன்று கனிமொழிக்கு ஏற்பட்ட நிலைக்கு அவரின் தாயார் ராஜாத்தி அம்மாளே காரணம், அவரின் ஆசையினாலும் தூண்டுதலினாலுமே அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரப்பட்டது, அதுவரை கனிமொழி நல்ல கவிஞராக இலக்கியவாதியாகவே எல்லாராலும் அறியப்பட்டார், அவர் தொடங்கிய வேலை வாய்ப்பு முகாம்கள் படித்த பட்டதாரிகளுக்கு வேலையும் வாழ்க்கையையும் பெற்றுத் தந்ததை யாராலும் மறுக்க முடியாது.

                 இன்னும் அவருக்கு கட்சியில் முக்கியத்துவத்தை அதிகப் படுத்தினால் அது அவருக்கும் கட்சிக்குமே பிரச்சனையாக முடியும், ஏற்கெனவே ஸ்டாலின், அழகிரி என இரு பிரிவாக செயல் படும் கட்சி இனி மூன்று பிரிவாக ஆவதற்கான வழிவகையாகவே இது அமையும். அதையும் தொடர்ந்து இது கனிமொழிக்கு பல பிரச்சனைகளையே தரும்.

                            இதுவரை கனிமொழியில் சிறையில் இருந்தவரை, அவர் திடமாக எதிர்கொண்டதாக சொல்லப்பட்டாலும், அவரின் தாயும் தந்தையும் உருகி துடித்ததை யாராலும் மறுக்க முடியாது , பெண் என்றும் ஒரு குழந்தைக்கு தாயென்றும் பாராமல் சிறையில் அடைத்திருக்கிறார்களே என்று பேசியவர்கள் இன்று அவருக்கு கட்சி பதவி கேட்பதில் துளியும் நியாயம் இல்லை. இது ஒரு நல்ல தாயை, மனிதாபிமானம் உள்ளவரை, இலக்கியவாதியை குழப்பும் செயலாகவே அமையும்.

                            இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எனது விருப்பம். மற்றவைகளின் ஆசைக்காகவும், பதவி மோகத்திற்காகவும் இவர் தன் வாழ்க்கையை பலியிடக்கூடாது என்பதும் என் விருப்பம்.ஏனெனில் இவரின் மனிதாபிமானம் திஹார் சிறையில் உள்ள குழந்தைகளும் அறிவார்கள்.இது மாதிரியான பண்புகளை எந்த ஆட்சி மாற்றத்தாலும் இவைகளை தடுக்கமுடியாது.


 நிறைவாக.., கனிமொழியை பற்றியும், அவரின் அரசியல் எதிர்காலத்தையும் பற்றி சிந்திப்பவர்கள், பேசுபவர்கள் அவரின் நலனில் உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. திருமதி.கனிமொழி  சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத்தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே.

பட உதவி: தினகரன், தி ஹிண்டு

அன்பன்
ARR

28 comments:

Unknown said...

தாங்கள் எழுதியுள்ள கருத்து
சரியானதே!
இதுவேஎன்விருப்பமும்
ஆகும்!

புலவர் சா இராமாநுசம்

பாரதி மணி said...

கனிமொழி நலனில் ஆர்வம் கொண்டவன் என்ற நிலையில், நீங்கள் சொல்வதை மனப்பூர்வமாக ஒத்துக்கொள்கிறேன்.

2004 சென்னை புத்தகவிழாவுக்கு, கணவர், மகனுடன் ஆட்டோவில் வந்திறங்கி, உயிர்மை ஸ்டாலில் அமர்ந்து எல்லோருடனும் சகஜமாக பேசிக்கொண்டிருந்த பழைய கனிமொழி ஆகமுடியுமா!

காய் பூவாகுமா?

பாரதி மணி

Admin said...

அருமையான பதிவு தோழர்..தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்..

Admin said...

அருமையான பதிவு தோழர்..தங்களின் கருத்தை ஆமோதிக்கிறேன்..

ரஹீம் கஸ்ஸாலி said...

கனிமொழி அரசியவாதியாக வேண்டாம்....கவிதாயினியாகவே தொடரட்டும்.

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு..... நல்லதொரு கவிதாயினி..... நீங்கள் சொல்வது போல இலக்கியத்தோடு இருந்தால் நல்லது தான்.... ஆனால்.... காலம் தான் பதில் சொல்லவேண்டும்.....

Madhavan Srinivasagopalan said...

// உண்மையான உரிமையுள்ள அவரின் கணவரை பற்றியும் அவரின் பிரிவால் துடித்த மகனின் எண்ணத்தை பற்றியும் கவலைபட்டதாக தெரியவில்லை. //

So, in your court, she is aquitted, the same way KK got rid of any punishment in the case investigated by Sarkariya Commission way back in 70s..

அப்பாதுரை said...

அரசியலில் நல்ல தாய்களுக்கு இடமில்லையா? ஏன்? இருந்திருந்து இப்பொழுது தான் திமுகவில் ஒரு பெண் இப்படி உயரத்துக்கு வந்திருக்கிறார். கலைஞரின் வாரிசாக இல்லாது போனால் இதுவும் சாத்தியமில்லை. வளர்ந்துவிட்டுப் போகட்டுமே? இவரும் ஊழல்ராணியென்றல் தானாகத் தெரிந்து விடும் இல்லையா? இலக்கியவாதி என்பது அறிந்திராத ஒன்று. அவர் எழுதிய இலக்கியம் பற்றி ஒரு பதிவு எழுதுங்களேன்?

சென்னை பித்தன் said...

சிறை சென்று திரும்பிய தியாகிக்குப் பதவி அவசியம் இல்லையா!

இராஜராஜேஸ்வரி said...

இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் நல்லது..

இராஜராஜேஸ்வரி said...

இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் நல்லது..

திண்டுக்கல் தனபாலன் said...

கருத்துள்ள பதிவு. நன்றி நண்பரே!
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

சுந்தர்ஜி ப்ரகாஷ் said...

கனிமொழிக்குள் இருக்கும் இலக்கிய ரசனை அவருக்கு இனியாவது வெளிச்சம் தரட்டும்.

அவருடைய கணவரின் பின்னே தொடரும் மகனின் புகைப்படம் என்னைக் கலக்கியது.

Unknown said...

AM WIT U BRO ...
TAMIL MANAM 6

ஸ்ரீராம். said...

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி...பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி என்ற பாடல் வரிகள் கேட்டிருக்கிறீர்களா?

ஸ்ரீராம். said...

வாழுகின்ற மக்களுக்கு வாழ்ந்தவர்கள் பாடமடி...பெற்றவர்கள் பட்ட கடன் பிள்ளைகளைச் சேருமடி என்ற பாடல் வரிகள் கேட்டிருக்கிறீர்களா?

PUTHIYATHENRAL said...

* உச்சிதனை முகர்ந்தால்”.!
* இந்தியாவின் பிரதமராகிறார் மகேந்த ராஜபக்சே!
* பெரியாரின் கனவு நினைவாகிறது
* இது ஒரு அழகிய நிலா காலம்! பாகம் ஒன்று!
* தமிழகத்தை தாக்கும் சுனாமி!
* தமிழர்களால் துரத்தி அடிக்கப்பட்ட தினமலர்!
* இந்தியா உடையும்! ஆனா உடையாது .
* ஆபத்தானது! கூடங்குளம் அணுமின் நிலையமா? தினமலரா?
* கொன்றவனை கொல்கிறவன் எங்களுக்கு மகாத்மா!
* போலி தேசபக்தியின் விலை 2 இலட்சம் தமிழர்களின் உயிர்!

கீதமஞ்சரி said...

நல்ல சிந்தனைதான். ஆனால் அங்கிருப்பவர்கள் நம் யோசனையைக் கேட்டு செயல்படுத்தும் வகையிலா இருக்கிறார்கள்?

Yaathoramani.blogspot.com said...

சும்மாவே ஆடுபவர்கள் கொட்டடிச்சா கேட்கவா வேண்டும்
தி.மு.க குடும்பச் சொத்தாகி பலகாலம் ஆகிவிட்டது
இல்லாத மனைவியின் வாரீசுகள் எப்போதுமே பாகம் பிரிப்பதில்
பாதிக்கப் படுவதும் இளைய மனைவி அதிகப் பங்குபெருவதும் சகஜம்
இதில் ஜெயுலுக்கு வேறு போய் வந்து விட்டார்
நிச்சயமாக கனிமொழி பதவி பெறுவார்
பொறுத்திருந்து பார்ப்போம்
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்

வை.கோபாலகிருஷ்ணன் said...

இனி கனிமொழி இந்த வழக்கை நல்ல முறையில் எதிர்கொண்டு, ஒரு நல்ல தாயாக, கவிஞராக, இலக்கியவாதியாக, நாட்டுப்புற கலைகளை வளர்ப்பவராகவே இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் நல்லது..

ஆம். அதுதான் நல்லது.

ஆனால் வழக்கிலிருந்து அவ்வளவு சுலபமாகத் தப்பித்து விட முடியுமா என்ன? பார்ப்போம்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள்.

தமிழ்மணம் 8 இண்ட்லி 5
vgk

rishvan said...

நல்ல பதிவு. பாராட்டுக்கள். thanks to share... please read my tamil kavithaigal in www.rishvan.com

Unknown said...

"திருமதி.கனிமொழி சமூக அக்கறையுள்ள ஒரு குடும்பத் தலைவியாக காணவே நடு நிலையாளர்களின் விரும்புகிறனர், என் விருப்பமும் அதுவே". என் விருப்பமும் அதுவே.

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு அண்ணா. உங்களின் எதிர்பார்ப்புகளைபோல் நிறைய பேர்கள்..

ரசிகன் said...

இப்போ தான் லீவுல வந்திருக்காங்க. கொஞ்சம் விடுங்க. பொறுமையா பாத்துக்கலாம்.

அம்பாளடியாள் said...

பகிர்வுக்கு மிக்க நன்றி சகோ .

PUTHIYATHENRAL said...

பெரிய ஊழலில் சிக்கி வெளியே வந்திருப்பவர் இவரை போன்ற ஊழல்வாதிகள் கவிதை எழுத சிறந்த இடம் சிறைசாலைதான். கருணாநிதி காண்ணீர் வடிப்பது எல்லாம் இருக்கட்டும் அவர் எத்தனை குடும்பத்தை கண்ணீர் வடிக்க வைத்தார் என்பதை கணக்கிட்டால் இது போதாது.......... அது போல் நீலி கண்ணீர் வடிக்க நமது அரசியல்வாதிகளுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். மொத்தத்தில் ஒன்று நன்றாக தெரிகிறது வறியவன் எதை செய்தாலும் அவன் மேல் சட்டம் நாய் மாதிரி பாயும், அதே நேரம் பணக்காரன் எது பண்ணினாலும் அவனை அது மலர் சரம் கொண்டு வரவேற்கும் என்பதை இது உணர்த்துகிறது. நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்ற நிலை இந்தியாவில் இல்லை என்பதற்கு அடுத்தடுத்து நடக்கும் பலநிகழ்வுகளில் இதுவும் ஒன்று. மற்றபடி கனி மொழி கவிதை எழுதினால் என்ன எழுதாமல் போனால் என்ன கோடிஸ்வரர்களுக்கு பொழுதுபோக்குக்கு எல்லாம் எழுதுவார்கள். இவரை விட திறமையான எத்தனயோ பெண்கள் இருந்தும் இவர் கருணாநிதியின் மகள் என்பதால் இந்த பெயரும் புகழும். மற்றபடி ஒன்றும் இல்லை.

Yaathoramani.blogspot.com said...

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய கிறிஸ்மஸ் மற்றும்
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
(புதுவருடத்தில் தொடர்ந்து பதிவுகள் தருவீர்கள் என நம்புகிறேன் )

ரசிகன் said...

ஒரு வாரம் ஊர் சுற்றப் போகிறேன். இணையத்தின் பக்கம் வர முடியாது. அதனால் இப்போதே சொல்லி விடுகிறேன்... வரும் ஆண்டு உங்களுக்கும், உங்களை சார்ந்தவர்களுக்கும், உலகத்துக்கும் இனிமையான ஆண்டாக அமையட்டும்.