அவசரத்தில் அள்ளிதெளித்த அரைவேக்காட்டுத்தனமாக அறிவித்த சமச்சீர் கல்வி தடை இன்று பல பகீரத முயற்சிகளுக்குப் பின் உச்ச நீதி மன்றத்தால் நீக்கப்பட்டு இருக்கிறது.இந்த மனு தொடர்பாக இன்று விசாரித்த ஜே.எம்,. பாஞ்சால் தலைமையிலான பெஞ்ச் நீதிபதிகள் , சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு தடை விதிக்க மறுத்து விட்டனர். வரும் ஆகஸ்ட் 2 ம் தேதிக்குள் பாடப்புத்தகங்களை விநியோகம் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ஏற்படுத்தப்பட்ட இந்த தடை ஏற்படுத்தி இருக்கும் இழப்பு எவ்வளவு தெரியுமா ??, மக்களின் வரிப் பணத்தில் புத்தகங்களுக்காக குறைந்த பட்சம் இருநூறு கோடி, இதனிலும் அதிகமாக நீதிமன்றத்தில் வாதாடியவர்களுக்கான கூலியும் , மற்றவர்களுக்கான போய் வந்த பொய் செலவுகளும் . இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல ஒண்ணே கால் கோடி மாணவர்களின் அறுபது கல்வி நாட்கள் , இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது இந்த அரசு , ஜெயலலிதாவிடம் மிகப் பெரிய மாற்றத்தை எதிர்ப் பார்த்த மக்களுக்கு இந்த மாதிரியான செயல்கள் மிகப் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை. எதில் தான் அரசியல் செய்வது என்ற அடிப்படை நியாம் கூட இல்லாத அரசுகள் அமைவதும் , அவற்றையே நாம் மீண்டும் சுழற்சி முறையில் தேர்தெடுப்பதும், தமிழக மக்களின் சாபக் கேடு .
அன்பன்
ARR