Saturday 26 March 2011

அனைவருக்கும் வண்ணமிகு வணக்கம் !

அனைவருக்கும் வண்ணமிகு வணக்கம் !


எல்லோரையும் போல் எனக்கும் ஏதாவது எப்போதாவது எழுத வேண்டும் என்ற எண்ணம் எப்போதும், என்னுளே ,என் ஓரத்திலே ஒளிந்து ஒலித்து கொண்டே இருக்கும் அதன் தொடர்ச்சியே இந்த முதல் முயற்சி . இதை தொடங்கும் முன் என்னுடைய எல்லா எழுத்துக்களையும் நல்லா இல்லை என்றாலும் ஆர்வமாய் , அதிசயமாய் , ஆச்சர்யமாய் ரசித்த என் அன்பான அம்மாவுக்கு என் முதல் நன்றி , பின் அதனை தொடர்ந்து என்னுடன் பிறந்ததற்காகவே அவைகளை சகித்து கொண்ட என் உடன்  பிறந்தவர்களுக்கு என் அடுத்த நன்றி ,பட்டிமன்றம் , கவிஅரங்கம் , வழக்காடு மன்றம், உரை வீச்சு , என்று வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் என் திறமையை பிரகடனபடுத்த பிரயத்தனபட்டு நான் கொட்டி தீர்த்த என் உளறல்களை உள்வாங்கிய ஹரித்ராநதி தெருவாசிகளுக்கு தெவிட்டாத நன்றி , முக்கியமாய் இது போன்ற ப்ளாக் களை தன் எழுத்தால் அறிமுகப்படுத்திய என் நண்பன் ஆர் வி எஸ் எம் க்கு முழு நன்றி ,நிறைவாய் என் குறைகளை முழுதாய் ஏற்று என்னை முழுமையாக்கிய என் மனைவிக்கு மகிழ்வான நன்றி .

அன்பன்
ARR

11 comments:

RVS said...

Congrats!!! Best Wishes Gopli...

A.R.ராஜகோபாலன் said...

அன்பான வெங்கட் .........
உன் எளிமையான எழிலான எழுச்சியான எழுத்துக்களே என்னை எழுத தூண்டியது
வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி , இன்னும் நீ என் குறைகளை குறைக்க , களைய வேண்டுகிறேன்

Madhavan Srinivasagopalan said...

யாரது.. ஹரித்ராநதி ARR கோபாலா ?
வாங்க.. நல்ல ஆரம்பம்தான்.. கலக்குங்க..
நா யாரா ?
இந்த Blog வந்து நம்ம படைப்புகளையும் படிச்சிட்டு உங்களால திட்ட முடிஞ்ச அளவுக்கு திட்டுங்க..
நா.. நா.. மேலவீதி (மேல்கரை அல்ல) மாதவன்..
இன்று முதல் நானும் உங்கள் வலைப்பூவை பின் தொடர்பவன்..

A.R.ராஜகோபாலன் said...

என் மிகப்ப்ரியமான மன்னை திரு மாதவன் ...
என் யூகம் சரி எனில் நீங்கள் ஸ்ரீராம் பெரியப்பா பையன் மாதவன் ? வெங்கடேசன் தம்பி சரியா, தவறெனில் தாங்கள் யார் என்ற விளக்கம் தாருங்கள் , மகிழ்ச்சி அடைவேன்.
நன்றி தொடர்புக்கும் , வாழ்த்திற்கும்
அன்புடன்
ARR கோபாலன்

Madhavan Srinivasagopalan said...

// ஸ்ரீராம் பெரியப்பா பையன் மாதவன் ? வெங்கடேசன் தம்பி சரியா, //

தங்கள் யூகம் பொய்யாகுமா ?
100 % சரியே..
பல நாட்களுக்குப் பின்னர், தங்களை வலையுலகின் மூலம் தொடர்பு கொல்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.. (thanks to RVSM -- I got ARRG link from then comment in RVSM's blog)

வெங்கடேசனின் வலைப்பூ இதுவே.
தங்கள் அண்ணன் ARR ரமேஷ் எப்படி இருக்கிறார்?
கிரிக்கெட் என்றால் எனக்கு நினைவில் வருபவர்களும் ரமேஷும் ஒருவர்.
தங்கள் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும்.... எனது வாழ்த்துக்கள்..
மிக்க அன்புடன்,
மாதவன்.

A.R.ராஜகோபாலன் said...

தங்கள் யூகம் பொய்யாகுமா ?

மிக சந்தோஷம் மாதவன்
உங்களை இங்கு அறிந்ததில் ரொம்ப மகிழ்ச்சி ......
நாம் ராமர் கோவிலில் பட்டி மன்றம் பேசியது ஞாபகம் வருகின்றது , நான் சரி எனில் காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா ? ஒரு தமிழ் புத்தாண்டில் என்று நினைவு .............
அன்பன்
ARR

A.R.ராஜகோபாலன் said...

மாதவன்..., மன்னார்குடியில் அனைவரும் நலம் ரமேஷ் இன்னும் கிரிகெட்டை விட்டு அகலவில்லை , விலகவில்லை இன்னும் தொட்டு தொடர்கிறது

Madhavan Srinivasagopalan said...

//நாம் ராமர் கோவிலில் பட்டி மன்றம் பேசியது ஞாபகம் வருகின்றது , நான் சரி எனில் காதல் திருமணமா? நிச்சயிக்கப்பட்ட திருமணமா ?//

ஆமாம்.. அது ஆங்கிலப் புத்தாண்டு என நினைவு. காதலின் பக்கம் நாமிருவரும் பேசியதாகவும்.. ஆசிரியர் வியஜராகவன் அதற்கு தலைமை ஏற்று தீர்ப்பு வழங்கியதாகவும் நினைவு.. (ஹி.. ஹி.. தீர்ப்பு நம்பக்கம் இல்லையென நினைவு. )

// ரமேஷ் இன்னும் கிரிகெட்டை விட்டு அகலவில்லை , விலகவில்லை இன்னும் தொட்டு தொடர்கிறது //

ம்ம்.. ஆச்சர்யம்தான்.. அவரொரு டெண்டுல்கராக இருக்கலாம்.. !!

ஒரு வேண்டுகோள்..
உங்கள் வலைமனையில் பின்புலம்(back-ground) மற்றும் முன்புலம்(fore-ground) வேறுபாடு இல்லாமல் படிக்க சற்று சிரமமாகவும் இருக்கிறது.. முடிந்தால் மாற்று ஏற்பாடு செய்யவும்.

மேலும்.. 'word verification' வேண்டியதில்லை என்பது எனது அபிப்ராயம்..

A.R.ராஜகோபாலன் said...

அன்பு மாதவன்
உண்மையாக எனக்கு word verification என்றால் என்னவென்று தெரிய வில்லை , சற்று விளக்கமாக கூறினால் நலம் .
உங்கள் கருத்தையே வெங்கடேசனும் சொல்லியிருக்கிறார் , அதை எப்படி மாற்றவேண்டும் என கற்று மாற்றி விடுகிறேன் , கருத்திற்கு நன்றி

A.R.ராஜகோபாலன் said...

அன்பு மாதவன் .
வெங்கட்டின் உதவியால் word verification மாற்றிவிட்டேன் ,
உங்களுக்கும் நண்பன் வெங்கட்டிற்கும் மனம் மகிழ்ந்த நன்றி

Madhavan Srinivasagopalan said...

Good.. nice to hear so.