Saturday, 26 March 2011

கல்லூரி காலங்கள் ..... MCE


 

கல்லூரி காலங்கள் ..... MCE

கல்லூரி காலங்கள் .....

இது என் நினைவலைகளில் ஒருஅலை 

        அனைவரையும் போலவே எங்களது கல்லூரி வாழ்கையும் கவலை இல்லாமலே கடந்துபோன இன்னும் கலந்துபோன , கவர்ந்துபோன காலங்கள்தான்,இறந்த காலங்கள் மீண்டும் திரும்பி வராது என்பது நிதர்சனமான உண்மை என்றாலும் கனவிலாவது வராதா என்பது  என்னுடைய சின்ன பெரிய ஆசை .



என்னுடைய கல்லூரி நண்பர்களில் என்னால் மறக்க முடியாத , என்னிலிருந்து பிரிக்க முடியாத நண்பர்கள்  ராசிபுரம் செந்தில் , திருச்சி ஏர்போர்ட் ஸ்ரீனி , உறையூர் சாலைதெரு கேப்ரியல், ஈரோடு அபுதாகிர் , தள்ளபாடி சுகா, கரூர் செல்வா , நெய்வேலி ரமேஷ் ,மணப்பாறை சத்யா ,சமயபுரம் பூபதி,திருவாரூர் போலிஸ் சுரேஷ் , லால்குடி ஜான்சன் ,துறையூர் கே கே ,D R K என்கிற ரவிக்குமார் , இப்படி நிறைய நிரம்பா சொல்லிக்கொண்டே போகலாம் . பொதுவாகவே பொறியியல் கல்லூரிகளில் ஹாஸ்டல்களில் தங்கி படிப்பவர்கள் ஒரு குழுவாகவும் , நேரடியாக தினமும் வந்து செல்லும் மாணவர்கள் ஒரு குழுவாகவும் இருப்பாகள் அதற்காக இருவரிடமும் பிரச்னை என்று அர்த்தம் இல்லை , ஒருவரோடு ஒருவர் பேசும், பழகும் நேரம் பொறுத்தே நட்பு பலப்படுவது இயல்பு .நான் முதல் இரண்டு  வருடங்கள் ஹாஸ்டல் வாசியாகவும் அடுத்த இரண்டு வருடங்கள் டேஸ்காலர் ஆகவும் இருந்ததால் எனக்கு எல்லோரிடமும் ஒரே மாதிரியான நட்பு வலிமையாக இருந்தது .

கல்லூரியின் முதல் நாள் /முதல் ஆண்டு 
         கல்லூரியில் புதிதாய் சேரும் மாணவர்கள் ராகிங் என்னும் ஒரு வித்தியாசமான அறிமுக படலத்தை சந்திக்காமல் இருக்கவே முடியாது , இருக்கவும் கூடாது .  கல்லூரி முதல் நாளில் நானும் அதை சந்திக்க நேர்ந்தது , என் சீனியர்கள் சும்மா வந்து என்னிடம் பேர் கேட்டதற்கே , தீவிரவாதிகளை கண்ட கேப்டன் போல நானும் கோவை சண்முகமும் வெகுண்டெழுந்து அன்றைய கல்லூரி செய்திகளில் முக்கிய செய்தியாணோம் , பின்பு அதே முக்கிய செய்திக்காக எங்க இருவரையும் 2nd , 3rd , 4th இயர் சீனியர்கள் மொத்தமாக முக்கி முக்கி எடுத்தது ஒரு தனி சோக கதை, ஆக்ரோஷமான நாங்கள் அந்த மொத்தலில்  அடங்கி ஒடுங்கி போனோம். 

கல்லூரியின் இரண்டாம் ஆண்டு 
          ராகிங் இல் நொந்து நூலான நாங்களும் இரண்டாம் ஆண்டு மாணவர்களானதால் , இந்த முறை எங்கள் முறை, அந்த இரண்டாம் ஆண்டு கல்லூரியின் முதல் நாளில் கிரிடம் சூட்டாத ராஜாவை போலவே கல்லூரியில் நுழைந்தேன், நல்ல அடிமைகள் சிக்கினார்கள் என்ற களிப்போடு இருந்த எனக்கு மீண்டும் ஓர் பேரிடி அதே  3rd , 4th இயர் சீனியர்கள் மூலமாக , நான் என் கல்லூரியின் முதல் நாளில் தெரியாத்தனமாக துள்ளியதால் (பின்பு என்னை அள்ளி அள்ளி துவைத்தது வேறு கதை ) நான் யாரையும் ராகிங் செய்யகூடாது என்ற புதிய ,வலிய, அநியாயமான உத்தரவு என் உற்சாகத்தை உள்ளே உதைத்து உருட்டி உடைத்து  உட்காரவைத்தது.   கிரிடம் சூட்டாத ராஜாவாக ஆசைப்பட்ட நான் அது கிட்டாமல் கிலிபிடித்த கீரிபிள்ளையானேன். என்ன கொடுமை இது , கைக்கு எட்டியது விரலுக்கு எட்டவில்லையே, ஆனாலும் என் அன்பான சீனியர்களுக்கு தெரியாமல் என் ராகிங் ஐ தொடங்குவது என முடிவெடுத்தேன்.

முதல் ராகிங் செய்த அனுப( பா)வம்

        அன்று உணவு இடைவேளையில் எனக்கு கிடைத்த இடைவெளியில் ஒரு முதலாம் ஆண்டு வகுப்பறையில் அலப்பறையாக நுழைந்தேன் , முதலில் தென்பட்ட ஒரு பாவப்பட்ட ஜீவனை என்னருகே அழைத்தேன் , ரொம்ப ஸ்டைலாக (பல நாள் ப்ராக்டிஸ் செய்த கேள்விகள் ) வாட் இஸ் யுவர் நேம் ? என்றதற்கு முருகேசன் சார்  என்று வந்த பதிலால் தைரியமடைந்த நான், க்ரோர்பதி அமிதாப் போல அடுத்த கேள்வியை வீசினேன், வாட் இஸ் யுவர் ஹாபி? என்ற எனக்கு அடுத்து வந்த பதில் என்னை நிலைகுலைய செய்தது அந்த பதில் சரியா இல்லை தவறா என்று உறுதி படுத்த முடியாத , கணிக்க முடியாத , யூகிக்க முடியாத ஆங்கில புலமை என்னுடையது , அந்த பதில் ஆஸ்கிங் சாங்க்ஸ் சார்  , என் முகத்தில் தெரியும் களேபரத்தை மறைத்து கொண்டு இன்னும் ஸ்டைலாக ( எனக்கு ஸ்டைலாக கேக்றோம்ன்னு தோணியது , அவனுக்கு எப்படி தோன்றியதோ ) என்னடா சொல்லுறே என்று வசதியாக தாய் தந்த தமிழ் மொழிக்கு மாறினேன் உடனே அவனும் அதற்கே காத்திருந்தால் போல் தமிழில், பாட்டு கேக்கறது சார் என்றான் , ஆங்கிலத்தில் பாதி A கூட முழுதாக தெரியாதா நானே சிரியோ சிரியென சிரித்தேன், அப்படி பட்ட ராகிங் அனுபவ தொடக்கம் என்னுடையது

மூன்று  மற்றும் நான்காம் ஆண்டு அனுபவங்கள் வரும் பதிவுகளில் ..................  

அன்பன்
ARR

4 comments:

Madhavan Srinivasagopalan said...

//அந்த பதில் ஆஸ்கிங் சாங்க்ஸ் சார் //

ஒரு முறை என்னிடம் நீங்கள் கேட்ட கேள்வி..(ராகிங் அல்ல..நான் உங்கள் கல்லூரி ஜூனியர் அல்ல.. நல்லவேளை.. ஸ்கூல் ஜூனியர்தான்)

பிசிக்ஸ் தெரிந்த மாடு எப்படி கத்தும் ?
பதில் : 'எஃப் '.
ஏனென்றால்.. 'F= MA'
(Force = Mass x Acceleration)

A.R.ராஜகோபாலன் said...

எனக்கு ஞாபகம் இல்லை மாதவன்
அதனை அறிவுபூர்வமான கேள்விகள் என்னிலிருந்தா???
எனினும் நினைவில் நிறுத்தியதர்க்கும்.. நினைவூட்டியதர்க்கும் நன்றி

rajesh said...

i am also MCE student 1922-1996. I am resident of thuraiyur. u r mentioned thuraiyur friend. his name is saravanan?

rajesh said...

am also MCE student 1922-1996. I am resident of thuraiyur. u r mentioned thuraiyur friend. his name is saravanan?