குழந்தைகள்........
வாழ்வியலின் வண்ணங்கள்
வாழ்வியலின் வசீகரங்கள்
வாழ்வியலின் வசந்தங்கள்
வாழ்வியலின் வடிகால்கள்
வாழ்வியலின் வடிவங்கள்
வாழ்வியலின் விழுதுகள்
வாழ்வியலின் அற்புதங்கள்
வாழ்வியலின் அஸ்த்திவாரங்கள்
வாழ்வியலின் அர்த்தங்கள்
வாழ்வியலின் முழுமைகள்
வாழ்வியலின் மகிமைகள்
வாழ்வியலின் தத்துவங்கள்
வாழ்வியலின் மகத்துவங்கள்
இன்னும்
இது போல் எத்தனையோ
இந்த குழந்தைகள் தின நாளில்
குழந்தைகளாய் இருப்பவர்களுக்கும்
குழந்தைகளாய் இருந்தவர்களுக்கும்
மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்
அன்பன்
ARR
36 comments:
Tamilmanam: 2 INDLI: 2
குழந்தைகளுக்கான அழகிய
உணர்ச்சி மிகுந்த பதிவு.
பகிர்வுக்கு நன்றி.
பாப்பா படம் சூப்பர். vgk
@வை.கோபாலகிருஷ்ணன்
மதி நிறை அய்யா, வணக்கம்
என்மீதான உங்களின் அன்பிற்கும் அக்கரைக்கும் மிக்க நன்றி. வருகைக்கும் கருத்திற்கும் பணிவான நன்றி.
குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்குமான வாழ்த்து. வாழ்த்துகள் ஏ ஆர் ஆர்...
////குழந்தைகள்........
வாழ்வியலின் வண்ணங்கள்
வாழ்வியலின் வசீகரங்கள்
வாழ்வியலின் வசந்தங்கள்
////
அருமையான வரிகள்
நல்ல வரிகள் நண்பரே....
குழந்தைகள் தினத்தன்று இந்த பதிவு வந்தது தான் சிறப்பு...
வாழ்த்துகள்....
கள்ளமில்லா குழந்தைகள் வளர வளர வாழ்வியலின் அத்தனை நலங்களும் குறையத் தொடங்குகின்றன. குழந்தை மனதை இழக்கமல் இருந்தால் இந்த உலகமே சொர்க்க பூமியாய் இருக்கும். குழந்தைகளை கடவுளின் உருவமாகக் காணலாம். குழந்தை உள்ளம் நம்மில் இருந்தால் கடவுளும் நம்முள் உறைவார். எண்ணங்களைக் கிளறியதற்கு பாராட்டுக்கள்.
குழந்தைகள் தினத்தில் குழந்தைகள் பற்றிய பாடல்
அருமை!
த ம ஓ 5
புலவர் சா இராமாநுசம்
அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை .. அருமை ..
இன்று என் வலையில்
சன் டி.வி அரசுடமையாகிறது- பரபரப்பு செய்தி
bro...
nice to c u here ...
take care
nice post
@ ஸ்ரீராம்
மிக்க நன்றி நண்பரே
@ K.s.s.Rajh
மனம் நிறைந்த நன்றி நண்பரே
@ வெங்கட் நாகராஜ்
மனம் மகிழ்ந்த நன்றி
@G.M Balasubramaniam
மிக்க நன்றி அய்யா....
@ புலவர் சா இராமாநுசம்
பணிவான நன்றி அய்யா
உடல் நலத்தில் கவனம் கொள்ளுங்கள்
@ "என் ராஜபாட்டை"- ராஜா
அருமையான நன்றி நண்பரே
@ ரியாஸ் அஹமது
மகிழ்வான நன்றி நண்பா.......
இனிய மாலை வணக்கம் அண்ணே,
நல்லா இருக்கிறீங்களா?
வேலை எல்லாம் எப்படிப் போகிறது?
தங்களின் மீள் வருகை மகிழ்சியளிக்கிறது!
குழந்தைகள் தினத்தின் குழந்தைகளின் உலகைப் பிரதிபலிக்கும் அருமையான கவிதையினைத் தந்திருக்கிறீங்க.
உங்கள் சுட்டியின் புகைப்படமா இப் பதிவில் உள்ளது?
நல்ல அழகாக இருக்கிறாங்க.
@நிரூபன்
நலம் சகோ நலம்தானே..
ஆமாம் என் உயிர்குட்டி தான் அது
நன்றி உங்களின் கருத்துக்கு
அருமையான வரிகள்.
குழந்தைகள் தினத்துக்கேற்ற பதிவு.
//வாழ்வியலின் அர்த்தங்கள்
வாழ்வியலின் முழுமைகள்//
Super! :-)
த.ம. 7!
@கோவை2தில்லி
மிக்க நன்றி சகோ,
உங்களின் வருகைக்கும் வாழ்த்திற்கும்
@ஜீ...
மிக்க நன்றி சகோ
கருத்திற்கும்
வாக்கிற்க்கும்
மகிழ்வான நன்றி
தங்கள் வாழ்த்திற்கு நன்றி ஐயா. :p
வாழ்வியலின் வண்ணங்கள்
வாழ்வியலின் வசீகரங்கள்
வாழ்வியலின் வசந்தங்கள்
வண்ண மயமாய்
வசீகரமாய்
வசந்த வாழ்த்துகளுக்குப் பாராட்டுக்கள்..
மொத்தத்தில் வாழ்வே அவர்கள்தான்
என்பதை மிக அழகாகச் சொல்லிப் போகும் தங்கள் பதிவு
அருமையிலும் அருமை.வாழ்த்துக்கள்
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
வெள்ளிக் கதவுகளும் கல்லால் ஆன
இருக்கையும் பிரமிப்பூட்டுகின்றன
அருமையான பயணத் தொடரை வழங்கும் தங்களுக்கு
எப்படி நன்றி சொல்வது எனத் தெரியவில்லை
மனமார்ந்த வாழ்த்துக்கள் த.ம 15
வந்துட்டேன் ...!
அண்ணா மருமகளின் போட்டோ சூப்பர்..
குழந்தைகள்தானே நமது குதூகலம் மொத்தமும்.
அழகிய தொகுப்பு.
குழந்தையாய் இருந்தவர்களுக்கும்,குழந்தையாய் இருப்பவர்களுக்கும் வாழ்ட்த்து.சரியே ஆனால் இன்றைய பொது வெளி குழந்தைகளை குழந்தைகளாக இருக்க விடுவதுஇல்லை.
”மழலைகள் உலகம் மகத்தானது” என்ற தலைப்பில் தொடர் பதிவு எழுத உங்களை அன்புடன் அழைக்கிறேன்.
அன்புள்ள வை. கோபாலகிருஷ்ணன்
gopu1949.blogspot.com 22.11.2011
அழகியல் தொகுப்பு பாஸ்
வணக்கம்...! இந்த பதிவுலகில் புதியவன். தங்களின் தளத்திற்கு இப்போது தான் வந்தேன். அருமையான கருத்துக்கள். தங்களின் முந்தைய பதிவுகளையும் படித்துக் கொண்டிருக்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி..!
நம்ம தளத்தில்:
"மனிதனுக்கு மிகப் பெரிய தண்டனை எது?"
//குழந்தைகளாய் இருந்தவர்களுக்கும்
மனம் மகிழ்ந்த வாழ்த்துக்கள்//
ஏன் பெரிசுகளுக்கு வாழ்த்துக்கள். அவனுகளுக்குத்தான் விதவிதமான நாட்கள் இருக்கின்றனவே? இக்குழந்தைகள் நாளிலாவது குழந்தைகளைத் தனியே பார்க்கவேண்டாவா?
குழந்தைகள் நாள் வந்தது.
அம்மா சொன்னாள்:
“போ. கட்டக்கடைசியில் மிட்டாய் கொடுப்பார்கள்”
போனேன்:
சரசரவெனப்பட்டுப்பாவாடைகள்; கைநிறையப் பலூன்கள்;
புதிய கால்சட்டைகள்;
பளபளக்கும் சட்டைகள்.
என்னைப்போன்ற சிறுவர்களும் சிறுமிகளும்.
வயதில் மட்டுமே.
ஆனால் அவர்கள் வேறு.
கலர்கலரான கார்களில் அப்பாக்கள் அம்மாக்கள்.
அழகாக இருந்தார்கள்.
குழந்தைகள் இறங்கினர்.
அவர்களுக்கான திண்பண்டங்கள் விற்கும் கடைகள்.
குழந்தைத்தொழிலாளர்கள் சப்ளை.
மினரல் வாட்டர் குழந்தைத் தொழிலாளர்கள் கொண்டுவந்தார்கள்.
குழந்தைகள் குதூகலித்தார்கள். குடித்தார்கள் பெப்சிக்களையும் கோலாக்களையும்
ஐஸ்கீரிம்களை அறைவாசியாக உறிஞ்சிவிட்ட
அடுத்து லே க்குப்போனார்கள்.
என்னால் அவற்றை எடுக்கமுடியவில்லை.
அம்மா திட்டுவாள்.
அம்மா என்ன குழந்தைத்தொழிலாளார்களுள் ஒருத்தியாக்த் தடுத்துவிட்டாள்.
சொன்னாள்; அவர்கள் கொஞ்சமாத்தான் கூலி கொடுப்பார்கள்.
கொஞ்சம் பெரிய பொண்ணானால் என்னுடன் வா என்றாள் கூலி நிறையக்கிடைக்கும்மென்றாள்.
இறுதியாக அமைச்சர் பேசினார்:
“இன்நாள் பொன்னாள். உங்களுக்கெல்லாம் நன்னாள்.”
கரகோசம். நானும் கைதட்டினேன். ஏனென்று தெரியவில்லை.
எல்லாரும் செய்தார்கள் எனவே.
ஒருவழியாக முடிந்தது. அனைவரும் சென்றபின்
எம்வரிசை. இறுதியில் எனக்கும் மிட்டாய்.
இன்னொன்று வாங்கினால் அம்மாவுக்கும் கொடுக்கலாமே?
குரக்கழுதை, சின்ன வயசிலேயே திருட்டுத்தனமா?
வாங்கிய மிட்டாயும் பறிபோயிற்று.
அடுத்த நவம்பர் 14ல் இதைசெய்யாதே கண்ணு
என்று அம்மா செல்லமாகத் திட்டினாள்.
அப்பாவிடம் சொல்லாதே என்று மட்டும் கெஞ்சினேன்.
ஏன் செய்தேன் என்று அவளுக்குச் சொல்லவில்லை.
காத்திருக்கிறேன்.
பெரியவளாகி கைநிறையக் கூலி வாங்க.
அப்போ நானே மிட்டாய்கள் வாங்கித்தின்பேன்.
--காவ்யா
Post a Comment