மழலைகள் உலகம் மகத்தானது என்ற மகோன்னத தொடர் பதிவை என்னை தொடர அன்பு கட்டளையிட்ட மதிப்புக்குரிய அய்யா திரு.வை.கோபாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவை ஏற்று நான் எழுதிய பதிவு இது...........
மழலைகள் உலகம் மட்டுமல்ல மழலைகள் உள்ள உலகமும் கூட மகத்தானதுதான். சரி மழலைகள் உலகம் மகத்தானது என்பதன் காரணத்தை அறிய முற்படுகையில் அந்த அற்புத உலகத்தில் தான் போட்டி, பொறாமை, குரோதம்,துரோகம், என்ற எந்த கீழான எண்ணங்களும் அவர்களிடத்தே இல்லை.சலனமே இல்லாத நிதர்சனமான உள்ளம் அது. சந்தோஷமோ, சோகமோ உடனே வெளிப்படுத்திவிடும் மழலைகளின் உலகம் மகத்தானதாக இருப்பதில் என்ன ஆச்சர்யம் இருந்துவிட முடியும்.
என் வாழ்க்கையில் இன்னும் என் குடும்பத்தில் பல மழலைகளைப் பார்த்திருந்தாலும், நான் ரசித்த இரு மழலைகளைப் பற்றியே இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.
1. என் சின்ன அண்ணன் மகள்: கமலகிருஷ்ணவி
எங்கள் குடும்பத்தில் சரியாக 35 வருடங்களுக்கு பிறகு பிறந்த பெண் குழந்தை அவள். அதற்கு முன் எங்கள் அம்மா அப்பாவிற்கு 8 பேர பசங்க இருந்தாலும் ஒரு பேத்தி இல்லையே என்ற குறை குறைக்க வராது வந்த மாமணி போல் வந்த தேவதை அவள். பேர பசங்களின் கடா முடா விளையாட்டுக்களையே பார்த்த நாங்கள் இவளின் அமைதியான விளையாட்டுக்களால் மனம் மகிழ்ந்து போனோம், அந்த நேரத்தில் எங்கள் குடும்பத்தின் நிதி நிலை சரியில்லாத கவலையை அகற்ற வந்த அகல்விளக்கு அந்த பாப்பாகுட்டி.
2. என் மகள்: கமலாத்மிகா
என்னையும் என் எழுத்தையும் தொடர்ந்து படித்து வருபவர்களுக்கு தெரியும் என் மகளை நான் பெற பட்ட வேதனைகள், ஒவ்வொரு முறையும் மருத்துவர்கள் வெவ்வேறு பிரச்சனைகளை சொல்ல, மனம் நொந்து மருத்துவமனையில் இருந்த என் மகளை பார்க்க போகும் போதெல்லாம், என்னை வரவேற்பது போல சின்ன கை, கால்களை ஆட்டி அந்த மணியான காந்த கண்களால் பார்க்கும் பார்வை ஒராயிரம் இடிகளையும் ஒருங்கே தாங்கும் சக்தியை தரும்.
நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை.
மழலைகளின் உலகம் மகத்தானது மட்டும் அல்ல, மகத்துவமானது இன்னும் மகோன்னதமானது.
அன்பன்
ARR.
16 comments:
malalaikal makilchchi mikkavarkal..melum namakku makilchchi tharupavarkal... vaalththukkal
Dear Sir,
என் அழைப்பினை ஏற்று மிக அழகாக மிகத்தெளிவாக மழலைகளைப் பற்றி தகுந்த உதாரணங்களும் படங்களும் அளித்து பரவஸப்படுத்தியுள்ள தங்கள் பதிவு மிகவும் அருமை.
பெண் குழந்தை இல்லையே என்ற ஏக்கம் எனக்கும் உண்டு தான். அதைத் தாங்கள் அழகாகவே சொல்லியிருக்கிறீர்கள்.
பெண் குழந்தைகள் மட்டுமே நம்மைப் புரிந்து கொண்டு, கடைசி வரை நம்முடன் பாசத்துடன் இருக்கக் கூடியவர்கள் என்பது என் [அனுபவபூர்வமான] கருத்து.
பதிவுக்குப் பாராட்டுக்கள்; வாழ்த்துக்கள்; நன்றிகள்.
அன்புடன் vgk
[தமிழ்மணம்: 3 இண்ட்லி: 2]
பெண் குழந்தைகள் துர்காதேவியின் அவதாரம். வீட்டில் மகிழ்ச்சியை தருபவர்கள். அமைதியான அழகான பதிவிற்கு மனப்பூர்வமான வாழ்த்துக்கள்.
சிறப்பான கருத்துக்களை சொல்லியிருக்கீங்க பாஸ் உங்கள் பதிவு சிறப்பு
மழலைகள் பற்றி அழகா சொல்லிட்டீங்க நண்பரே.... வாழ்த்துகள்...
Super
மழலைகளுடன் நாம் இருக்கும்போது கவலைகள் தொலைந்து மனம் லேசாகிவிடும். உங்கள் வீட்டு செல்வங்கள் வளமுடன் வாழ வாழ்த்துகிறேன், வேண்டுகிறேன்.
குழந்தைகள் பற்றிய அழகான கருத்துக்களை அழகாக கூறியிருக்கிறீர்கள்
அன்பு உறவே!
உள்ளம் சோர்வடையாமல் செல்லுங்கள். இறைவன் துணை இருக்க கவலை எதற்கு?
http://atchaya-krishnalaya.blogspot.com
மகிழ்வை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி
மழலைகள் பற்றி அழகா சொல்லியிருக்கீங்க.
இரண்டு பெண்களுமே அழகா இருக்காங்க.
// நம் உருவத்தையும், நம்மவர்களின் உருவத்தையும் செயல்களையும் அவர்களின் வழியே காணும் போது நாம் பெரும் இன்பம் எதற்கும் ஈடாகாது.
நம் சந்ததிகளின் வழியே நம் சாயல்களை நம் மழலைகளின் வழியே காணும் போது அந்த ஆண்டவனின் படைப்பையும் அதன் ஆச்சர்யத்தையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை//
மிகப்பெரிய உண்மை!அதை
அனுபவித்து சொன்னீர்கள்
இரண்டு மழலைகளும்
முத்துக்ள்!
புலவர் சா இராமாநுசம்
Good post.. nice article.
இதத்தான் அப்பவவே சொன்னாரு வள்ளுவப் பெருந்தகை..
குழலினிது யாழினிது என்பர் தம்மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்.
குழந்தைகளின் பெயர்கள் அருமை. அவர்களின் குணங்களும் தான்.
இதே தலைப்பு நம்ம பக்கத்திலும்...
http://vaazhveperaanantham.blogspot.com/2011/11/blog-post_14.html
beautiful photo! best wishes.
அழகான பெயர்கள் அன்பான குழந்தைகள்.......... இந்த மாதம் விகடன் யூத் விகடனில் உங்கள் பதிவு வந்துருகிறது வாழ்த்துகள்.............
Post a Comment